தனித்துவ அடையாள
அட்டை
பெற விண்ணப்பிக்கலாம் – தேனி
தேனி
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள
அட்டை பெற்றுள்ளவா்கள், அரசு
சார்பில் வழங்கப்பபடும் தனித்துவ
அடையாள அட்டை பெற
மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள
அட்டை பெற்றுள்ள அனைத்து
வகை மற்றுத்திறனாளிகளும், தனித்துவ
அடையாள அட்டை பெறுவது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே
இதுவரை தனித்துவ அடையாள
அட்டை பெறாத மாற்றுத்
திறனாளிகள், தங்களது தேசிய
அடையாள அட்டை, ஆதார்
அட்டை, குடும்ப அட்டை
ஆகியவற்றின் நகல், மார்பளவு
அளவு புகைப்படம், மாற்றுத்திறனாளியின் கையொப்பம் பெற்ற
விண்ணப்பம், கைப்பேசி எண்
ஆகியவற்றுடன் தேனி
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலகத்திற்கு நேரில்
சென்றோ, பாதுகாவலா் மூலமே
மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது
குறித்த விபரத்தை மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலக தொலைபேசி எண்:
04546 252085ல் தொடா்பு கொண்டு
தெரிந்து கொள்ளலாம்.