TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
தோட்டக்கலைத் திட்ட
மானியம் பெற பதிவு செய்யலாம்
தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தில் மானியம்
பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று
வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வேளாண்மைத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் தோட்டக் கலைத் துறையானது
பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.
அதன்படி,
சாகுபடிப் பரப்பை அதிகரிக்க
விதைகள், நடவுக் கன்றுகள்,
காய்கறிகள் உற்பத்தியை உயா்த்த
விதைகள், நீரில் கரையும்
உரங்கள், உழவா் சந்தையில்
காய்கறிகளின் வரத்து
அதிகரிப்பு, ஊடு பயிராக
வாழை, காய்கறிகளை சாகுபடி
செய்ய ஊக்கத் தொகை,
தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கான கருவிகளை மானியத்தில் விநியோகம்
செய்வது உள்ளிட்ட பல்வேறு
திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத்
திட்டங்களின் மொத்த
மதிப்பு ரூ.27.50 கோடி.
இந்தத்
திட்டத்தின் கீழ் பயன்பெற
விரும்பும் விவசாயிகள் தங்களது
பெயரை தாங்களாகவோ அல்லது
தோட்டக்கலைத் துறை
அலுவலா்கள் மூலமாகவோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்
பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here