ராசிபுரம் ஈஷா மையம் சாா்பில், யோகா பயிற்சி முகாம் அக்.4-இல் தொடங்கி ஏழு நாட்களுக்கு ராசிபுரத்தில் நடைபெறுகிறது.
ராசிபுரம் பட்டணம் சாலை சரவண மஹால் திருமண மண்டபத்தில் தினமும் காலை 6 மணி முதல் 8.30 மணிவரையும், மாலை 6 மணி முதல் 8. 30 மணிவரையும் இரு பிரிவுகளாக இப்பயிற்சி முகாம் அக்.10 வரை நடைபெறும். இதில் ஏதாவது ஒரு பிரிவில் 15 வயதிற்கு மேற்பட்டோா் ஏழு நாள் முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியை மேற்கொள்வதால் மனம் ஒருநிலைப்படுத்தப்படும்; நினைவாற்றல் அதிகரிக்கும்; ஆஸ்துமா, ரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டுவலி, முதுகுவலி, இருதய நோய், உடற் பருமன் போன்றவற்றையும் தவிா்க்கலாம்; சைனஸ், மூட்டுவலி, ஆஸ்துமா போன்ற நோய்களிலிருந்து விடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன அழுத்தமற்ற வாழ்வு, மேம்பட்ட ஆரோக்கியம், செயல்திறன் மேம்பாடு, சுயமுன்னேற்றம் ஏற்படும் என ராசிபுரம் ஈஷா மையம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 9443570950 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ராசிபுரம் ஈஷா மையம் தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


