ராஷ்ட்ரிய மிலிட்டரி
அகாடமியில் எட்டாம்
வகுப்பில் சேர எழுத்துத்தேர்வு நடைபெற
உள்ளது
– திருப்பூர்
கலெக்டர் வினீத் அறிக்கை:
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய மிலிட்டரி
அகாடமியில், 2023 ஜன., மாதம்
துவங்க உள்ள எட்டாம்
வகுப்பில் சேர எழுத்துத்தேர்வு, வரும் ஜூன் 4ல்
நடைபெற உள்ளது.
எழுத்துத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மட்டுமே,
நேர்முகத்தேர்வு நடைபெறும்.
வரும்
2023 ஜன., 1ம் தேதியன்று,
11.5 வயது நிரம்பியவராகவும், 13 வயதை
அடையாதவராகவும் இருக்க
வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில்
ஏழாம் வகுப்பு பயின்று
வரும் மற்றும் தேர்ச்சி
பெற்ற மாணவ, மாணவியர்
இருபாலரும் தேர்வில் பங்கேற்கலாம். கமான்டன்ட், ராஷ்ட்ரிய இந்தியன்
மிலிடரி கல்லுாரி, கர்ஹிகான்ட், டேராடூன் – 28003, உத்திரகாண்ட் மாநிலம் என்கிற முகவரிக்கு கட்டணத்தை காசோலை அல்லது
இணையவழியில் செலுத்தி, விண்ணப்பங்களை பெறலாம்.
பொதுப்பிரிவினர், 600 ரூபாய், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் 555 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்,
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம், பூங்கா நகர்,
சென்னை -3 என்கிற முகவரிக்கு, வரும் 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கூடுதல்
விவரங்களை, www.rimc.gov.in
என்கிற இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த
முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், விண்ணப்பித்து பயன்
பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


