கூட்டுறவு உதவி
இயக்குநர் பணிக்கு ஏப்ரல்
30ல் எழுத்துத் தேர்வு
கூட்டுறவு
உதவி இயக்குநர் பதவியில்
8 காலியிடங்களை நிரப்பும்
பொருட்டு ஏப்ரல் மாதம்
30ம் தேதி எழுத்துத்
தேர்வு நடைபெற உள்ளது.
M.A.,
கூட்டுறவு பட்டதாரிகள், கூட்டுறவை
ஒரு பாடமாக எடுத்து
எம்காம் படித்தவர்கள் எம்காம்
பட்டத்துடன் கூட்டுறவில் உயர்நிலை
டிப்ளமா முடித்தவர்கள் மற்றும்
சிஏ. இறுதி தேர்வு
தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு
விண்ணப்பிக்கலாம்.
வயது
வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 ஆக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது
வரம்பு கட்டுப்பாடு கிடையாது.
தகுதியுடைய முதுகலை பட்டதாரிகள் டிஎன்பிஎஸ்இ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பிப்ரவரி
21ம் தேதிக்குள் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல்
விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.