HomeBlogஒருங்கிணைந்த இன்ஜினியர் பதவிக்கு ஜூன் 26ம் தேதி எழுத்து தேர்வு - TNPSC
- Advertisment -

ஒருங்கிணைந்த இன்ஜினியர் பதவிக்கு ஜூன் 26ம் தேதி எழுத்து தேர்வு – TNPSC

Written Examination for the post of Integrated Engineer on 26th June - TNPSC

ஒருங்கிணைந்த இன்ஜினியர் பதவிக்கு ஜூன் 26ம்
தேதி எழுத்து தேர்வு
– TNPSC

TNPSC தமிழக அரசின் மோட்டார்
வாகன பராமரிப்பு துறையில்
காலியாக உள்ள ஆட்டோ
மொபைல் இன்ஜினியர் 4 இடங்கள்,
மின்துறையில் ஜூனியர்
எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் 8 இடம், வேளாண்மை துறை
உதவி இன்ஜினியர்-66 இடங்கள்,
நெடுஞ்சாலை துறை உதவி
இன்ஜினியர்-33, தொழில் துறை
பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்
உதவி இயக்குனர்-18, பொதுப்பணித்துறையில் உதவி இன்ஜினியர் 309 இடங்கள், தமிழ்நாடு மோட்டார்
வாகன பராமரிப்பு மையத்தில்
போர்மேன் 7 இடங்கள், டெக்கினிக்கல் அசிஸ்டெண்ட் 11, தமிழ்நாடு பஞ்சாயத்து மேம்பாட்டு சேவை துறையில்
உதவி இன்ஜினியர் 92 இடங்கள்
என 549 இடங்கள் நிரப்பப்படுகிறது.

மேலும்,
தமிழ்நாடு குடிசை மாற்று
வாரியத்தில் உதவி இன்ஜினியர் 64 இடங்கள், மெட்ராஸ் மெட்ரோபாலிட்டன் வளர்ச்சி ஆணையத்தில் உதவி
இன்ஜினியரில் 13 இடங்கள்
என 77 நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான நாளில்
இருந்து டிஎன்பிஎஸ்சி ஆன்லைனில்
விண்ணப்பித்தல் தொடங்கியது. தேர்வுக்கு அடுத்த மாதம்
3
ம் தேதி வரை
விண்ணப்பிக்க கால
அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்து
தேர்வு ஜூன் 26ம்
தேதி நடைபெறுகிறது. அன்றைய
தினம் காலை 9.30 மணி
முதல் 12.30 மணி வரை
முதல் தாள் தேர்வு(டிகிரி
தரம்) நடைபெற உள்ளது.
பிற்பகல் 2 மணி முதல்
5
மணி வரை இரண்டாம்
தாள் தேர்வு நடைபெறுகிறது என்று டிஎன்பிஎஸ்சி தனது
இணையதளத்தில் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -