தினமலர் நாளிதழ்,
சத்யா ஏஜென்சிஸ் இணைந்து
நடத்தும் மகளிர் கலைத்திருவிழா கோலப்போட்டி
தினமலர்
நாளிதழ் மற்றும் சத்யா
ஏஜென்சிஸ் இணைந்து நடத்தும்
மகளிர் கலைத் திருவிழா
கோலப்போட்டி, சென்னை பெரம்பூர்,
ராஜா அண்ணாமலைபுரம், சேலையூர்
ஆகிய மூன்று இடங்களில்
வரும் 9ம் தேதி
நடக்கிறது.பெண்களின் கோலத்
திறமைக்கு மகுடம் சூட்டி
மகிழ ‘தினமலர்‘ நாளிதழ்
மற்றும் சத்யா ஏஜென்சிஸ்
இணைந்து, மகளிர் கலைத்
திருவிழா கோலப்போட்டி ‘கோலம்
போடுறதுன்னா சும்மாவா‘ என்ற
தலைப்பில் கோலப்போட்டியை நடத்த
உள்ளன.
போட்டியில் பங்கேற்போருக்கு 10 லட்சம்
ரூபாய்க்கும் மேற்பட்ட
பரிசுகள் வழங்கப்பட உள்ளன.முதல்
பரிசாக மூன்று பேருக்கு
’32 இன்ச் சாம்சங் ஸ்மார்ட்
‘டிவி‘யும், இரண்டாம்
பரிசாக மூன்று பேருக்கு
‘சாம்சங் ஆட்டோமேடிக் வாஷிங்
மிஷன்‘கள், மூன்றாம்
பரிசாக மூன்று பேருக்கு
‘வேர்ல்பூல் ரெப்ரிஜிரேட்டர்‘கள்
வழங்கப்பட உள்ளன.போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் 1,000 ரூபாய்
மதிப்புள்ள பரிசு உண்டு.
நடுவரின் தீர்ப்பே இறுதியானது.போட்டியில் பங்கேற்போருக்கு, ‘கோலமிட
நான்கிற்கு நான்கு அடி
இடம் ஒதுக்கப்படும்.
இந்த
இடத்தில் 60 நிமிடங்களில் கோலமிட
வேண்டும். கோலமிடுவதற்கு தேவையான
பொருட்களை தாங்களே எடுத்து
வர வேண்டும். உதவிக்கு
18 வயதுக்கு மேற்பட்ட பெண்
ஒருவரை அழைத்து வரலாம்.
காலை 6.30 மணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கண்டிப்பாக இருக்க
வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.முன்பதிவு
செய்தவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். புள்ளி
கோலம், ரங்கோலி கோலம்,
டிசைன் கோலம் அனுமதிக்கப்படும்.
போட்டியாளர்கள் கொரோனா விதிமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தடுப்பூசி
செலுத்தியவர்களுக்கு மட்டுமே
அனுமதி. தடுப்பூசி சான்று
அவசியம்.கோலமிட உப்பு,
ரசாயன பொருட்களை தவிர்க்க
வேண்டும் போன்ற நிபந்தனைகளும் இடம் பெற்றுள்ளன.கோலப்போட்டியின், ‘கிப்ட் ஸ்பான்சராக‘ ஆச்சி
நிறுவனம் உள்ளது. மேலும்
‘பானாசோனிக்‘ நிறுவனமும் ஒத்துழைப்பு வழங்குகிறது.
எங்கு, யாரை தொடர்பு கொள்ள வேண்டும்???
சென்னை,
பெரம்பூர், ஜமாலியா பஸ்
நிலையம் அருகில் உள்ள
எவர்வின் வித்யாஸ்ரம் பள்ளி
ராஜா
அண்ணாமலைபுரத்தில் உள்ள
டாக்டர் எம்.ஜி.ஆர்.,
ஜானகி காலேஜ் ஆப்
ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ்
சேலையூர்,
நடராஜன் நகரில் உள்ள
சியோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை
பள்ளி
வரும்
9ம் தேதி காலை
7.00 மணி முதல் 8.00 மணி
வரை
எவர்வின்
பள்ளியில் பங்கேற்க விரும்புவோர் 81229 71772 என்ற எண்ணில்
அழைக்கலாம்
எம்.ஜி.ஆர்.,
ஜானகி கல்லுாரியில் பங்கேற்க
விரும்புவோர் 81483 01771 என்ற
எண்ணில் அழைக்கலாம்
சியோன்
பள்ளியில் பங்கேற்க விரும்புவோர் 81229 01770 என்ற எண்ணில்
அழைக்கலாம்
முதலில்
முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேவையான
நபர்கள் முன்பதிவு முடிந்ததும் மொபைல் எண் ‘சுவிட்ச்
ஆப்‘ செய்யப்படும்.