தமிழகத்தில் இலவச
வீடுகள் யாருக்கு? 10 புதிய
அறிவிப்புகள்
தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும்
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில்,25,000 அடுக்குமாடி குடிருப்புகள் இந்த நிதியாண்டில் செய்யப்படும் வகையில், 10 புதிய
அறிவிப்புகளை நகர்ப்புற
மேம்பாட்டு வாரியம் சார்பில்,
அமைச்சர் தா.மோ.அன்பரசன்
வெளியிட்டுள்ளார்.
1.அதன்படி
நடப்பு நிதியாண்டில் நில
உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற
பயனாளிகளுக்கு தாமாகவே
வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம்
தனி வீடுகள் கட்டப்படும்.
2. மேலும்
நகர்ப்புறங்களில் வாழும்
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
3.இதையடுத்து மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற
சிதிலடமைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.1200 கோடி திட்ட
மதிப்பீட்டில் இந்த
ஆண்டு மறுகட்டுமானம் செய்யப்படும்.
4. குடியிருப்பு திட்ட பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நல்ல
முறையில் பேணி காத்திட
கொண்டுவரப்பட்ட “நம்
குடியிருப்பு நம்
பொறுப்பு‘ திட்டத்தை திறம்பட
செயல்படுத்த குடியிருப்போர் நலச்
சங்கங்கள் பதிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய பதிவுக்
கட்டணத்திற்கு விலக்கு
அளிக்கப்படும்.
5. இதனை
தொடர்ந்து குடியிருப்புதரர்கள் உடனடியாக
பராமரிப்பு கட்டணம் செலுத்துவதற்கு ஊக்கமளிக்கும் வகையில்,
3 மாத பராமரிப்பு தொகை
அரசு பங்களிப்பு நிதியிலிருந்து முன்பணமாக செலுத்தப்படும்.
6. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பு பணியை திறம்பட
செயல்படுத்திட தமிழ்நாடு
நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தில் தனி பராமரிப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்.
7.குடியிருப்புதாரர்கள் வாரியத்திற்கு செலுத்த
வேண்டிய மாதாந்திரத் தவணைத்
தொகையினை இணையதள செயலி
மூலம் குறித்த காலத்திற்குள் சுலபமாக செலுத்த வழி
வகை செய்யப்படும்.
8. மேலும்
சென்னை மற்றும் இதர
நகரங்களில் உள்ள 40,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூபாய்
100 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த நிதியாண்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
9. வீட்டு
வசதி தேவை, இருப்பு
நிதி ஆதாரங்கள், வீட்டுவசதி சந்தையின் செயல்திறன் முதலீடு
மற்றும் கொள்கை முடிவு
எடுக்க ஏதுவான வழிமுறைகள் குறித்த தகவல்களைக் கொண்ட
தளமாக ஒருங்கிணைந்த தமிழ்நாடு
வீட்டு வசதி தகவல்
அமைப்பு இயங்கும்.
10.பயனாளிகள்
திறன் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யும்
வகையில் பல்வேறு தரை
பரப்பளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும்
திட்டம் செயல்படுத்தப்படும்.