TNPSC குரூப் 2 தேர்வில்
வெற்றிப்பெற்றால் என்னென்ன
வேலைகளில் சேரலாம்?
TNPSC நடத்தும்
குரூப் 2 மற்றும் குரூப்
2 ஏ– தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி 2022-ல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த
குரூப் 2- குரூப் 2 ஏ
தேர்வுகள் எழுதினால் தேர்ச்சி
பெற்றால் எந்த பணிகளுக்கு அமர்த்தப்படுவார்கள். யாரெல்லாம் இந்த தேர்வை எழுதலாம்.
TNPSC குரூப்
-2 கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு,
முதன்மைத் தேர்வு, நேர்காணல்
என மூன்று நிலைகளின்
கீழ் தேர்வு செய்யப்படுகின்றனர்.
TNPSC குரூப்
-2 ஏ கீழ் உள்ள
காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத்
தேர்வின் அடிப்படையில் தேர்வு
செய்யப்படுகின்றனர்.
தேர்வு
எழுத தகுதியானவர்கள்: ஏதேனும்
ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் குரூப்-2
தேர்வு எழுதலாம்.
என்ன வேலையில் அமர்த்தப்படுவார்கள்:
சார்
பதிவாளர், வருவாய் உதவியாளர்,
முதுநிலை ஆய்வாளர், துணை
வணிகவரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி
தொழிலாளர் ஆய்வாளர், இளைநிலை
வேலைவாய்ப்பு அலுவலர்,
டிஎன்பிஎஸ்சி உதவி
பிரிவு அதிகாரி, உள்ளாட்சி
நிதி தணிக்கை உதவி
ஆய்வாளர், இந்து சமய
அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை
ஆய்வாளர், பேரூராட்சி செயல்
அலுவலர் போன்ற பதவிகளில்
உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்க
பணியமர்த்தப்படுவர்.
குரூப்
2 ஏ–வில் மொத்தம்
5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக
டிஎன்பிஎஸ்சி தலைவர்
செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அறிவிப்பாணை வெளியான
பிறகும்கூட இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.