HomeBlogNEET தேர்வு அடுத்த நடைமுறை என்ன? ரிசல்ட் எப்போது?

NEET தேர்வு அடுத்த நடைமுறை என்ன? ரிசல்ட் எப்போது?

what-is-the-next-procedure-for-neet-exam-when-is-the-result

NEET தேர்வு அடுத்த
நடைமுறை என்ன? ரிசல்ட்
எப்போது?

நீட்
தேர்வு செப்டம்பர் 12 அன்று
நடைபெற்றது. பெரும்பாலும் தேர்வு
நடந்த 1 மாதத்திற்குள் முடிவுகள்
வெளியிடப்படும்.

இந்தாண்டு
இதுவரை Answer
Key

வெளியிடப்படவில்லை. அது
வெளியான பிறகே, தேர்வு
முடிவுகள் வெளியாகுவது வழக்கம்.
அந்த Answer
Key

மற்றும் OMR response sheet ஆகியவை
https://neet.nta.nic.in/webinfo/Page/Page?PageId=8&LangId=P என்ற
என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளத்தில்
வெளியிடப்படும்.

இதைத்
தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் Answer Key.ல் எதேனும் கேள்விக்கு விடை தவறாகும் இருக்கும்
பட்சத்தில், தகுந்த விளக்கத்துடன் கேள்வி எழுப்பலாம். அந்த
பிராசஸ் முடிந்த பிறகு,
இறுதி Answer
Key

வெளியிடப்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

நீட்
தேர்வு முடிவுகளுடன், அகில
இந்திய தரவரிசை பட்டியலும் வெளியிடப்படும். முக்கியம்சமாக இந்தாண்டு, டை பிரேக்கிங்கில் விண்ணப்பதாரரின் வயது
ஒரு காரணியாக கருதப்பட்டு வந்தது நீக்கப்பட்டுள்ளது.

Tie Breaking Formula:

இரண்டு
மாணவர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றால், அவர்களது மார்க்கை
முடிவு செய்ய Tie Breaking Formula பயன்படுத்தப்படுகிறது. உயிரியலில் அதிக மதிப்பெண் எடுத்த
மாணவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அப்போதும், டை நீடித்ததால், அடுத்ததால் வேதியியலில் அதிக
மதிப்பெண் கணக்கிடப்படும். அப்போதும்
மார்க் டையாகும் பட்சத்தில், அனைத்து தேர்விலும் குறைவான
அளவில் தவறான விடைகளை
எழுதியவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

NEET 2021 Mark மதிப்பீடு முறை:

NEET
2021
இயற்பியல், வேதியியல் மற்றும்
உயிரியல் (தாவரவியல் மற்றும்
விலங்கியல்) ஆகியவற்றை குறித்து
180
கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதில்,
இயற்பியல் மற்றும் வேதியியல்
பிரிவுகளில் தலா 45 கேள்விகளும், உயிரியல் பிரிவில் 90 கேள்விகளும் இருக்கும். NEET 2021க்கான
மொத்த மதிப்பெண்கள் 720.

NEET
கவுன்சிலிங்கில் பங்கேற்க
நீட் கட்ஆஃப் மதிப்பெண்
அவசியம். ஒவ்வொரு சரியான
விடைக்கும் 4 மதிப்பெண்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். தவறான விடைக்கு,
ஒரு மார்க் மைனஸ்
செய்திட வேண்டும். கேள்விக்கு விடையளிக்கவில்லை என
கூறி எவ்வித மார்க்
குறைக்கப்படாது.

NEET
Mark அறிய இந்த
பார்முலா மிகவும் உபயோகமாக
இருக்கும். நீட் 2021 மதிப்பெண்
= (
சரியான விடை * 4) – (தவறான
விடை* 1)

பேஸ் 2 பதிவு கட்டாயம்

தேர்வு
முடிவுகள் வெளியாகுவதற்கு முன்பு,
விண்ணப்பதாரர்கள் நீட்
தேர்வின் இரண்டு கட்ட
ரெஜிஸ்ட்ரேஷன் பிராசஸை
கட்டாயம் முடித்திட வேண்டும்.
மாணவர்கள் தங்கள் தரவை
விரைவாகச் சமர்ப்பிக்க உதவுவதற்காக, இந்தாண்டு ரெஜிஸ்டர் செயல்முறை
இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப்
பதிவின் போது நிரப்பப்பட வேண்டிய விவரங்களை மாணவர்கள்
என்டிஏயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். NEET பேஸ்
2
பதிவை ரெஜிஸ்டர் செய்யாதோர்களின், NEET தேர்வு முடிவுகள்
வெளியாகாது.

கட்ஆஃப்
மார்க் கணக்கிடுவது மூலம்
கவுன்சிலிங்கில் எந்த
கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். 15 சதவீத அகில
இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான NEET கவுன்சிலிங் மருத்துவ
ஆலோசனை குழுவும் (எம்சிசி),
85
சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில
அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!