கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் 4 புதிய நெல் ரகங்கள் உள்பட வேளாண்மை, தோட்டக்கலை, மரப்பயிா்கள் என 23 புதிய பயிா் ரகங்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 வேளாண் பயிா்கள், 3 தோட்டக்கலை பயிா்கள், 4 மரப்பயிா்கள் என 23 புதிய பயிா் ரகங்களை பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி அறிமுகப்படுத்தினாா். மேலும்,விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 10 புதிய தொழில்நுட்பங்களும், 6 புதிய பண்ணை இயந்திரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பயிர் ரகங்களின் அறிமுகம் நிகழ்விற்கு பின் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி குறிப்பிட்டவை:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள்,வேளாண் அறிவியல் நிலையங்களும் இயங்கி வருகிறது. இந்த நிலையங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப புதிய ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த ஆராய்ச்சிகளின் மூலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து ஆண்டுதோறும் புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் வனப்பயிர்கள் என 23 புதிய ரகங்கள் தமிழ்நாடு அரசின் புதிய ரகங்கள் வெளியிட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும்,விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 10 புதிய தொழில்நுட்பங்களும், 6 புதிய பண்ணை இயந்திரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
4 புதிய நெல் ரகங்கள் உட்பட தோட்டக்கலை பயிர்களில் காய்கறி, பயிர்கள் சாகுபடி செய்யும் வகையில் பீர்க்கங்காய் மற்றும் குத்து அவரையில் தலா ஒரு ரகமும், மலர் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் மார்கழி மல்லி என்ற மலர் ரகமும் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் மானாவரி மற்றும் தரிசு நிலங்களில் சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில் சுமார் 4 புதிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அறிமுகம் செய்யப்பட்ட 23 வகையான புதிய பயிா் ரகங்களின் விவரம் –
- கோ.56
- கோ.57
- ஏடிடி.58
- ஏஎஸ்டி.21
- மக்காச்சோளம்-கோ.ஹெச்.11
- கம்பு-கோ.ஹெச்.10
- சோளம்-கே.13
- குதிரைவாலி-அத்தியந்தல்.1
- பனிவரகு-அத்தியந்தல்.2
- பாசிப்பயறு-கோ.9
- பாசிப்பயறு-வம்பன்.6
- தட்டைப்பயறு-வம்பன்.4
- சூரியகாந்தி-கோ.ஹெச்.4
- எள்-வி.ஆா்.ஐ.5
- கரும்பு-கோ.18009
- பீா்க்கங்காய்-மதுரை.1
- குத்துஅவரை-கோ.16
- மாா்கழி மல்லிகை-கோ.1
- சணப்பை-ஏடிடி.1
- இலவம்பஞ்சு-மேட்டுப்பாளையம்.1
- செம்மரம்-மேட்டுப்பாளையம்.1
- சவுக்கு-மேட்டுப்பாளையம்.13
- ஆப்பிரிக்கன் மகோகனி(காயா)-மேட்டுப்பாளையம்.1
புதிதாகஅறிமுகம்செய்யப்பட்டுள்ளபயிர்ரகங்களையும்மற்றும்தொழில்நுட்பங்களையும்விவசாயிகள்பயன்படுத்திவேளாண்சாகுபடியினைஅதிகரிக்கவேண்டும்எனதனது பேட்டியில் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


