சேக்கிழார் ஆராய்ச்சி
மைய விருதுக்கு நுால்கள்
வரவேற்பு
தமிழ்
கலாசாரம், பண்பாடு, வளர்ச்சிக்கு பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில்,
சிறந்த நுால்களுக்கு பரிசுகள்
வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து, சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மைய செயலர் சிவாலயம் ஜெ.மோகன் விடுத்த அறிக்கை:
சென்னை
சேக்கிழார் ஆராய்ச்சி மையமும்,
முத்துமணி துரைசாமி – துரைசாமி
அறக்கட்டளையும் இணைந்து,
ஆண்டு தோறும் சிறந்த
நுாலுக்கான விருதுகளை வழங்கி
வருகிறது. இவ்வாண்டும் விருதுகள்
வழங்கப்பட உள்ளன.
இதற்கு,
2019 ஏப்., 1 முதல் நடப்பாண்டு மார்ச் உட்பட்ட காலத்தில்
முதற்பதிப்பு கண்ட
சமய மற்றும் சமய
இலக்கியம் சார்ந்த நுால்களின் மூன்று பிரதிகளை, ஜூன்
15ம் தேதிக்குள், கே.துரைசாமி,
மூத்த வழக்கறிஞர், அறங்காவலர் – சேக்கிழார் ஆராய்ச்சி மையம்,
எண் 54, வெங்கட கிருஷ்ணாபுரம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 28 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வாகும் நுால்களுக்கு, ஜூலை
மாத இறுதி வாரத்தில்
நடக்கும் சேக்கிழார் விழாவில்
பரிசுகள் வழங்கப்படும்.முதல்
பரிசாக 25 ஆயிரம் ரூபாய்;
இரண்டாம் பரிசாக 15 ஆயிரம்
ரூபாய்; மூன்றாம் பரிசாக
10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தேர்வு பெறாத நுால்கள்
திருப்பி அனுப்ப இயலாது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


