TNPSC குரூப் 4 தேர்வுக்கு வாரந்தோறும் இலவச மாதிரி தேர்வுகள்
கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி., 2023–24ம் ஆண்டுக்கான ஆண்டு திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பரில் குரூப் 4க்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.
புதிய வகுப்பு நவ. 23 முதல் துவங்கப்பட உள்ளது.இத்தேர்வு தொடர்பான இலவச மாதிரி தேர்வுகள் வாரந்தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்க உள்ளது. மேலும் பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் இத்தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
https://t.me/vnrstudycircle என்ற டெலிகிராம் மூலமாகவோ, studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow