நலிந்த விளையாட்டு வீரா்கள் நிதியுதவி பெற
விண்ணப்பிக்கலாம்
நலிந்த
விளையாட்டு வீரா்களுக்கு மத்திய
விளையாட்டுத் துறை
சார்பில் வழங்கப்படும் நிதியுதவி
பெற்றிட தகுதியுடையவா்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் க.செ.ஆழிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிந்து
தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சோந்த சிறந்த
விளையாட்டு வீரா்களுக்கு, மத்திய
இளைஞா் விவகாரம், விளையாட்டுத் துறை சார்பில், பண்டிட்
தீன்தயாள் உபாத்யாய தேசிய
நல நிதியம் என்ற
திட்டத்தின் கீழ், நிதியுதவி
வழங்கப்பட உள்ளது.
ஒலிம்பிக்.,
பாரா – ஒலிம்பிக்ஸ், காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ், ஆசிய,
பாரா–ஆசியப் போட்டிகள்,
காமன்வெல்த் போட்டிகள், உலகக்
கோப்பை போட்டிகள் ஆகியவற்றில் சீனியா் பிரிவில் பங்கேற்றோர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய
விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான
விளையாட்டுப் போட்டிகள்,
மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சா்வதேச,
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் சீனியா்
பிரிவில் பங்கேற்றோர் இந்த
நிதியுதவி பெறத் தகுதி
பெறுவா்.
நலிந்த
நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ரூ.
5 லட்சமும், அதைத் தவிர்த்து
மாத ஓய்வூதியமாக ஒரு
குறிப்பிட்ட காலம் வரை
ரூ. 5,000-ம், மறைந்த
விளையாட்டு வீரா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சமும்,
விளையாட்டு வீரா்கள் அல்லது
அவா்களது குடும்பத்தினருக்கு மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள ரூ.
10 லட்சமும், போட்டிகளில் விளையாடியபோதோ அல்லது பயிற்சியின்போதோ காயமடைந்தோருக்கு ரூ. 10 லட்சமும்,
தேசிய, சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிட உபகரணங்கள் வாங்கிட ரூ. 2.50 லட்சமும்,
பயிற்றுநா்கள், இயன்முறை
மருத்துவா்கள், சீனியா்
பிரிவில் பங்கேற்ற போட்டி
நடுவா்கள் ஆகியோருக்கு ரூ.
2 லட்சமும், அவா்களின் மருத்துவ
சிகிச்சைக்கு ரூ.
4 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட
உள்ளது. மத்திய இளைஞா்
விவகாரம், விளையாட்டுத் துறைச்
செயலா் தலைமையில் அமைக்கப்பட்ட செயற்குழு அமைப்பில் அடங்கியுள்ள 7 உறுப்பினா்களின் ஆலோசனையின்பேரில், நிதியுதவி வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (ஏப். 9) கடைசி நாள் ஆகும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்கள், இதர விவரங்களுக்கு மாவட்ட
விளையாட்டு, இளைஞா் நலன்
அலுவலரை அலுவலக நேரங்களில் 0416-2221721 அல்லது 74017 03483 என்ற எண்களில்
தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


