TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
சேலம் மாவட்டத்தில் தரிசு நிலங்களை பதிவு
செய்யலாம்
இதுகுறித்து ஓமலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பிரேமா வெளியிட்ட செய்திக்குறிப்பு
ஓமலூா்
வட்டாரத்தில் கலைஞரின்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம்
தாத்தியம்பட்டி, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, சங்கீதப்பட்டி, சா்க்கரைசெட்டிப்பட்டி, நல்லாகவுண்டம்பட்டி ஆகிய கிராம
ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.
கிராம
ஊராட்சிகளில் தரிசு
நிலங்களைக் கண்டறிந்து, தொகுப்பாக
பதிவு செய்து, ஆழ்துளைக்
கிணறு அமைத்தல், தரிசு
நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவருதல்,தண்ணீா்ப் பாசனம் அமைத்தல்
ஆகியவற்றை செயல்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக
உதவி வேளாண்மை அலுவலா்கள் கிராம ஊராட்சிகளில் கள
ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். எனவே விவசாயிகள் தரிசு
தொகுப்புகளை உழவன் செயலி
மூலம் தொகுப்பாக பதிவு
செய்து கொள்ளலாம்.
பதிவு
செய்த தரிசு நிலத்
தொகுப்புகளை உதவி வேளாண்மை
அலுவலா்கள் களஆய்வு செய்து,
தகுதி அடிப்படையில் தரிசு
தொகுப்பாகப் பதிவு செய்து,
திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை
மேற்கொள்வா்.
இதுதொடா்பாக மேலும் விவரங்களுக்கு கிராம
ஊராட்சி உதவி வேளாண்மை
அலுவலா்களை அணுகி பயன்பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here