Air India விமான
பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான
ஏர் இந்தியா தங்களது
விமானத்தில் கடந்த 2011 ஆம்
ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம்
தேதி முதல் 2021 ஆம்
ஆண்டு பிப்ரவரி 2 ஆம்
தேதி வரை பயணித்த
பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அது
என்னவென்றால், இந்த
ஆண்டுகளில் பயணிகளின் தனிப்பட்ட
விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த
பிப்ரவரி மாதம் ஏர்
இந்தியா நிறுவனத்தின் இணையதள
பக்கமான எஸ்ஐடிஏ யில்
சைபர் தாக்கத்தால் ஏற்பட்டதால் தான் பயணிகளின் விவரங்கள்
கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட விவரங்களான பயணிகளின் பெயர், முகவரி,
கிரெடிட் கார்டு குறித்த
தகவல் ஆகியவை கசிந்து
இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 45 லட்சம் பயணிகள்
பயணம் மேற்கொண்டு இருப்பதாகவும் அந்த நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்
காரணமாக இந்த காலகட்டத்தில் பயணம் செய்த பயணிகள்
தங்களது பாதுகாப்பினை உறுதி
செய்து கொள்ள வேண்டும்
என்று அந்த நிறுவனம்
சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே
போல் இந்த சைபர்
தாக்குதலில் பாஸ்வேர்டுகள் எதுவும்
கசியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகள்
கவனமாக இருக்குமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.