100 நாள் வேலை
திட்டத்தில் ஊதியம் உயர்வு
100 நாள்
வேலை திட்டத்தில் ஊதியம்
01-04-2022 முதல் ரூ.281 ஆக
உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில், மகாத்மா காந்தி தேசிய
வேலை வாய்ப்பு உறுதி
திட்டம் பிப்ரவரி 2006ல்
இந்திய அரசால் தொடங்கப்பட்டது என்றும், இது ஒவ்வொரு
நிதியாண்டிலும் ஊரக
குடும்பங்களுக்கு 100 நாட்கள்
வேலை வாய்ப்பை தரும்
திட்டமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,
திறன் சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் ஊரக
விலை பட்டியலின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதாகவும், ஒரு
வயது வந்த நபர்
ஒரு மணி நேரம்
உணவு இடைவெளியுடன் கூடிய
8 மணி நேர வேலைக்கு
பெறக்கூடியதற்கு சமமாக
நிர்ணயிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2021-2022ம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்ட ஊதியம்
நாளொன்றிற்கு ரூ.273
ஆக நிர்ணயிக்கப்பட்டது என்றும்,
2022-2023ம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்டதற்கான ஊதியம் 01.04.2022 முதல்
ஆண்கள் மற்றும் பெண்கள்
என்ற வேறுபாடின்றி தமிழ்நாட்டிற்கு நாள் ஒன்றுக்கு ரூ.281
என்று திருத்தி அமைக்கப்படுவதாக ஊராட்சித்துறை கொள்கை
விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


