வாக்காளர் அடையாள
அட்டை இல்லாமல் வாக்களிக்கலாம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும்
ஏப்ரல் மாதம் 6ஆம்
தேதி நடைபெறவுள்ளது. இந்த
தேர்தலில் மக்கள் அனைவரும்
வாக்களிக்கும் வகையில்
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வாக்காளர் அடையாள அட்டை
இல்லாதவர்கள் வாக்களிக்க வசதியாக இந்திய தேர்தல்
ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களை
வைத்து தேர்தலில் வாக்களிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன் படி:
- ஆதார் அட்டை,
- மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலை
திட்டத்தின் அட்டை, - வங்கி மற்றும்
அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள், - தொழிலாளர் நல
அமைச்சக திட்டத்தில் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை,
- ஓட்டுநர் உரிமம்,
- பான் கார்டு,
- தேசிய மக்கள்
தொகை பதிவேட்டின் ஸ்மார்ட்
அட்டை, - புகைப்படத்துடன் கூடிய
ஓய்வூதிய ஆவணம், - மத்திய, மாநில
அரசின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, - இந்திய கடவுச்சீட்டு,
- பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான அலுவலக
அடையாள அட்டை
ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை
வைத்து வாக்களிக்கலாம்.
அதே
போல 20ஏ சட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ்
இந்தியர்கள் அவர்களது கடவுச்சீட்டை வைத்து மட்டுமே வாக்களிக்க முடியும். காலை 7 மணி
முதல் மாலை 7 மணி
வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
அதே போல் வாக்காளர்கள், Booth முகவர்கள் கைபேசியை
வாக்குச்சாவடிக்குள் எடுத்து
வரக்கூடாது.
கொரோனா
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்காளர்கள் அனைவரும்
மாஸ்க் அணிந்து வர
வேண்டும். தெர்மல் ஸ்கேனிங்
மூலம் பரிசோதனை செய்த
பின்பு வாக்காளர், கையுறையுடன் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.