Sunday, August 10, 2025
HomeBlogவாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா - புகாரளிக்க எண்கள் அறிவிப்பு

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா – புகாரளிக்க எண்கள் அறிவிப்பு

 

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாபுகாரளிக்க எண்கள் அறிவிப்பு

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து புகாரளிக்க எண்களை
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக
சட்டமன்றத்திற்கு வரும்
ஏப்ரல் 6-ஆம் தேதி
ஒரே கட்டமாக தேர்தல்
நடைபெறும் என்று தேர்தல்
ஆணையம் சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது.

அதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி பல்வேறு வகைகளில் பணம்
மற்றும் பரிசுப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவதாக திமுக உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் குற்றம்
சாட்டின.

இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து
புகாரளிக்க எண்களை தேர்தல்
ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம்
வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில்:

 வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து
தகவல் தெரிவிக்க விரும்பினால் itcontrol.chn@gov.in
என்ற மின்னஞ்சலிலும், 9445394453 என்ற
Whatsapp எண்ணிலும் தொடர்பு
கொள்ளலாம்.

தேர்தலில்
பண விநியோகத்தினை கண்காணித்து தடுக்கும் பொருட்டு வருமான
வரித்துறையின் உதவியையும் தேர்தல் ஆணையம் நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments