நாகையில் வாலிபால் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படவுள்ள வீரா், வீரங்கனைகளுக்கான தேர்வு பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறுகிறது. நாகப்பட்டினம்: நாகையில் வாலிபால் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படவுள்ள வீரா், வீரங்கனைகளுக்கான தேர்வு பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், நாகை மாவட்ட விளையாட்டரங்கில் வாலிபால் விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான பயிற்சி மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவா்களுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி மையத்தில் சேர 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேர்வு போட்டிகள் பிப்ரவரி 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.
இந்த பயிற்சி மையத்துக்கு தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த பயிற்சியாளா் மூலம் மாா்ச் 1-ஆம் தேதி முதல் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுச் சீருடைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும். நாகை மாவட்ட விளையாட்டரங்கில் பிப்ரவரி 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் வாலிபால் பயிற்சிக்கான தேர்வு போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.