
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் உதவித் தொகை பெற்று பயிற்சி பெறும் வகையில் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் ஜன.31-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சாா்பில், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் தொழிற் பழகுநா்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, திருச்சி மாவட்டத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் ஜன. 31-ஆம் தேதி காலை 10 மணி அளவில் திருச்சி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது.
இந்த சோ்க்கை முகாமில் இதுவரை தொழிற்பழகுநா் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவா்களை மற்றும் 2021-22, 2022-23, 2023-24 ஆகிய வருடங்களில் தோ்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியாா் ஐ.டி.ஐ பயின்றவா்கள், 8ம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 10,12 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞா்கள் (இருபாலரும்) மற்றும் பட்டம், பட்டயப் படிப்பு முடித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்தப் பயிற்சியின்போது, உதவித் தொகையாக மாதம் ரூ. 7,700 முதல் ரூ. 12,000 வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும்.
தொழிற்பழகுநா் சட்டத்தின் படி இந்த நிறுவனங்களில் சோ்ந்து ஓராண்டு தொழிற்பழகுநா் பயிற்சி பெறுபவா்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, மாணவா்கள் இந்த சோ்க்கை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
கூடுதல், விவரங்களை அறிய திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 94436–44967, 0431–2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

