
இந்திய பாதுகாப்பு படையில் பல்வேறு பணி வாய்ப்புகளுக்காக வழிகாட்டுதல்கள் இலவசமாக அளிக்கப்படுகின்றன – விழி விழிப்புணர்வு அறக்கட்டளை
விழி விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில், இந்திய பாதுகாப்பு படையில் பல்வேறு பணி வாய்ப்புகளுக்காக வழிகாட்டுதல்கள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
இலவச பயிற்சி பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எதிர்வரும், 2024ம் ஆண்டில் என்.டி.ஏ., சி.டி.எஸ்., ஏ.எப். சி.ஏ.டி., சி.ஐ.எஸ்.எப்., சி.ஏ.பி.எப்., ஆகிய தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த, இலவச வழிகாட்டுதல்கள், பயிற்சி புத்தகங்கள் விழி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படவுள்ளது.
பாதுகாப்பு படையில் பணியில் சேர ஆர்வமுள்ள ஆண், பெண்கள் வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்கள், படித்து முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் அனைவரும் விண்ணப்பித்து பயிற்சி மேற்கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு, 8015192734/ 9659982071 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என விழி விழிப்புணர்வு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

