HomeBlogதை 1ஆம் தேதி கிராமங்கள் தோறும் ஊரக விளையாட்டுப் போட்டிகள்

தை 1ஆம் தேதி கிராமங்கள் தோறும் ஊரக விளையாட்டுப் போட்டிகள்

தை 1ஆம்
தேதி கிராமங்கள் தோறும்
ஊரக விளையாட்டுப் போட்டிகள்

வரும்
தை ஒன்றாம் தேதி
தமிழ் புத்தாண்டு என
விளையாட்டுத்துறை அமைச்சர்
மெய்யநாதன் தன்னுடைய ட்விட்டர்
பக்கத்தில் தெரிவித்து இருப்பதால், விரைவில் இது குறித்த
அறிவிப்பு வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

தைப்பொங்கலை முன்னிட்டு கிராமங்கள் தோறும்
ஊரக விளையாட்டுப் போட்டிகள்
நடைபெறும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
தெரிவித்துள்ளார்.

பொங்கல்
பண்டிகையை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக
விளையாட்டுத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனைக் கூட்டம்
தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விளையாட்டு துறை செயலாளர்
அபூர்வா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் ஆனந்தகுமார் ஐஏஎஸ் உள்ளிட்ட உயர்
அதிகாரிகள் பங்கேற்றார்கள்.

இதில்
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
மெய்யநாதன் கலந்துகொண்டு அறிவுறுத்தல்களை வழங்கினார். இதுகுறித்து டிவிட்டரில் தெரிவித்துள்ள அமைச்சர்,
தமிழர் திருநாளாம் தமிழ்
புத்தாண்டு, தைப்பொங்கல் விழாவினை
முன்னிட்டு முதலமைச்சரின் உத்தரவிற்கு இணங்க கிராமங்கள் தோறும்
ஊரக விளையாட்டுப் போட்டிகள்
நடத்தப்படும் என
கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular