ரூ.3,000 உதவித்தொகையுடன் கூடிய
வைணவ
பயிற்சி
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உள்ள
இந்துக்களில் சாதி
வேறுபாடின்றி அர்ச்சகராக நியமனம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு 2021 – 2022 மானியக் கோரிக்கை
அறிவிப்பு எண்.95-ல் அறிவிக்கப்பட்டபடி, வைணவ (வைகானசம்) ஓராண்டு
சான்றிதழ் பயிற்சி,
சென்னை-5, திருவல்லிக்கேணி, அருள்மிகு
பார்த்தசாரதிசுவாமி கோயிலில்
நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவர்கள் உரிய படிவத்தில் விவரங்களை முழுமையாக
அளித்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க
வேண்டும். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.2022 அன்று
14 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு
உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இந்து
வைணவ கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும். வைணவ
பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி
நிலைய வளாகத்திலேயே தங்கி
பயில வேண்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு, சீருடை,
உறைவிடம், பயிற்சி
காலத்தில் மாதம் ஒன்றுக்கு
ரூ.3,000 உதவித்தொகை ஆகியவை
வழங்கப்படும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
மாணவர்களின் தேர்வு, தேர்வுக்குழுவின் முடிவுக்கு உட்பட்டது
விண்ணப்பங்கள் வந்து
சேர வேண்டிய கடைசி
நாள்: 26.12.2021 அன்று
மாலை 5.00 மணி வரை
ஆகும்.
விண்ணப்ப
படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் மற்றும் https://hrce.tn.gov.in/ என்ற
இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய
முகவரி: துணை ஆணையர், செயல் அலுவலர்/தக்கார், அருள்மிகு
பார்த்தசாரதி சுவாமி
திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை – 600 005 என்ற
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

