HomeBlogதமிழக மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் பணியிடங்கள் – விரைவில் நிரப்ப திட்டம்

தமிழக மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் பணியிடங்கள் – விரைவில் நிரப்ப திட்டம்

 

தமிழக மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் பணியிடங்கள்விரைவில் நிரப்ப திட்டம்

தமிழக
மின்சார வாரியத்தில் கருணை
அடிப்படையில் விண்ணப்பித்த வாரிசுகளின் விண்ணப்பங்கள் மீது
விரைவில் நடவடிக்கை எடுக்க
மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில்
பணியாற்றும் அலுவலர்கள் பணிக்காலத்தின் போது இறக்க நேரிட்டால் அவர்களின் பணி குடும்பத்தில் உள்ள வாரிசுகளுக்கு கருணை
அடிப்படையில் வழங்கப்படுகிறது. இவ்வாறு பணி பெற
விருப்பமுள்ளவர்கள் அவர்களது
தாய் அல்லது தந்தை
பணிபுரிந்த மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கு
வாரிசுதாரர்களின் கல்வி,
வயது, வாரிசுரிமை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு சம்மந்தப்பட்ட மாவட்ட அலுவலருக்கு அனுப்பி
வைக்கப்படும். பிறகு
அதன் உண்மைத்தன்மையை கண்டறிய
சம்மந்தப்பட்ட கல்வி
நிறுவனங்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டு பின்னர்
வேலை வழங்க தலைமை
அலுவலகத்திற்கு அனுப்பி
வைக்கப்படும்.

இந்த
நடைமுறையில் காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால்
தமிழக மின்சார வாரியம்
கருணை அடிப்படை வாரிசுகளின் விண்ணப்பங்களில் விரைவில்
நடவடிக்கை எடுக்க வேண்டும்
என திட்டமிட்டுள்ளது. இதன்படி
இந்த விண்ணப்பங்கள் மீது
உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோர் விசாரணை நடத்த
தேவை இல்லை என
தெரிவித்தனர்.

அதே
போல பணியில் சேர்ந்த
பின் வழங்கப்பட்ட சான்றிதழ்
போலியானதா இருந்தால் பணி
நீக்கம் செய்து சட்டப்படி
நடவடிக்கை எடுக்க உரிமை
உண்டு என மின்வாரிய
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular