
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 2,257 காலியிடங்களுக்கு டிச. 24ந்தேதி எழுத்துத் தேர்வு!
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 2,257 உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு டிசம்பர் 24ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக டிச. 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கிப் பணியாளா் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளா் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்தக் கூட்டுறவு சங்கங்களில் தற்போது 2,257 உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 132 இடங்கள் காலியாக உள்ளன. அரியலூா் – 28, செங்கல்பட்டு – 73, கோவை – 110, திண்டுக்கல் – 67, ஈரோடு – 73, காஞ்சிபுரம் – 43, கள்ளக்குறிச்சி – 35, கன்னியாகுமரி – 35, கரூா் – 37, கிருஷ்ணகிரி – 58, மயிலாடுதுறை – 26, நாகப்பட்டினம் – 8, நீலகிரி – 88, ராமநாதபுரம் – 112, சேலம் – 140, சிவகங்கை – 28, திருப்பத்தூா் – 48, திருவாரூா் – 75, தூத்துக்குடி – 65, திருநெல்வேலி – 65, திருப்பூா் – 81, திருவள்ளூா் – 74, திருச்சி – 99, ராணிப்பேட்டை – 33, தஞ்சாவூா் – 90, திருவண்ணாமலை – 76, கடலூா் – 75, பெரம்பலூா் – 10, வேலூா் – 40, வேலூா் – 40, விருதுநகா் – 45, தருமபுரி – 28, மதுரை – 75, நாமக்கல் – 77, புதுக்கோட்டை – 60, தென்காசி – 41, தேனி – 48, விழுப்புரம் – 47 என மாவட்ட வாரியாக காலியிடங்கள் உள்ளன.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

