HomeBlog2024ம் ஆண்டு முடிவடைவதற்குள் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்கள் உள்ளிட்டவைகளில் USB Type-C சார்ஜர்

2024ம் ஆண்டு முடிவடைவதற்குள் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்கள் உள்ளிட்டவைகளில் USB Type-C சார்ஜர்

2024ம் ஆண்டு முடிவடைவதற்குள்
மொபைல்
போன்கள்,
டேப்லெட்டுகள்
மற்றும்
கேமராக்கள்
உள்ளிட்டவைகளில்
USB Type-C
சார்ஜர்

உலகம் முழுவதும் மின்னணு சாதனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்னணு கழிவுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது இதனை கட்டுப்படுத்துவதற்கு
பல்வேறு
நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.

அந்த வகையில் புதிய சட்டம் ஒன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த
புதிய
சட்டத்தின்
படி,
2024
ம்
ஆண்டு
முதல்
அனைத்து
மொபைல்
போன்கள்,
டேப்லெட்,
மடிக்கணினி
உள்ளிட்ட
மின்னணு
சாதனங்களுக்கும்
ஒரே
சார்ஜராக
USB Type-C
இருக்க
வேண்டும்.

இந்த தீர்மானத்திற்கு
ஆதரவாக
602
ஓட்டுகளும்,
எதிராக
13
வாக்குகளும்
பதிவாகியது.
அதனால்
இந்த
புதிய
சட்டம்
ஐரோப்பிய
பாராளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலமாக மின்னணு கழிவுகள் குறையும் என இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மேலும்
சுற்றுச்சூழலுக்கும்,
நுகர்வோருக்கும்
மிகுந்த
பயனுள்ளதாகவும்
இது
அமையும்.
மேலும்
நுகர்வோர்
வாங்கும்
அனைத்து
மின்னணு
சாதனங்களுக்கும்
USB Type-C
சார்ஜரை
மட்டும்
வாங்கினால்
போதுமானது.
மற்ற
சார்ஜரை
வாங்க
தேவையில்லை.
இதனால்
நுகர்வோரின்
செலவும்
பெருமளவு
குறைகிறது.

இந்த புதிய விதிகளின் படி, வருகிற 2024ம் ஆண்டு முடிவடைவதற்குள்
அனைத்து
மொபைல்
போன்கள்,
டேப்லெட்டுகள்
மற்றும்
கேமராக்கள்
உள்ளிட்டவைகளில்
USB Type-C
சார்ஜர்
பொருத்தப்பட்டிருக்க
வேண்டும்.
அதன்பின்பு
2026
ஆம்
ஆண்டு
மடிக்கணினிகளுக்கும்
இந்த
புதிய
சட்டமானது
நீடிக்கப்படும்
எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே
போல்
தேவையில்லாமல்
மற்ற
சார்ஜர்
வாங்குவதும்
குறையும்.
இதனால்
பழைய
சார்ஜர்களை
குப்பையில்
வீசுவது
வெகுவாக
குறைவதுடன்
மின்னணு
கழிவுகளும்
கணிசமாக
குறையும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular