உங்கள் மொபைல் எண்ணை அப்டேட் செய்து மின்வெட்டுகள் மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் பற்றிய தகவல்களைப் பெறலாம் என டான்ஜெட்கோ அறிவித்துள்ளது.
உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்க TANGEDCO இணையதளமான https://www.tnebltd.gov.in/mobilenoentry/ பார்த்து அறியலாம் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் எங்கு மின் தடை ஏற்பட்டாலும் சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். அப்படி குறைகளை தெரிவிக்கும் போதே, உங்கள் மொபைல் எண் மின்வாரியத்தின் இபி கனெக்சனுடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்களிடம் எந்த விவரமும் கேட்காமலேயே மின்சாரம் உங்கள் ஏரியாவில் எப்போது வரும், மின்தடை உள்ளதா என்பதை எளிதாக மின்வாரியத்தில் இருந்து கூறிவிடுவார்கள்.
இதுதவிர மின்வாரியத்தில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து கொண்டால் உங்களுக்கு மின்சார பில் இந்த மாதம் எவ்வளவு வந்துள்ளது என்பது எஸ்எம்எஸ் ஆக வந்துவிடும். அத்துடன் மின்தடை ஏற்பட போகிறது என்றாலோ அல்லது மாதாந்திர மின்தடை ஏற்பட போகிறது என்றால் உங்களுக்கு முன்னதாகவே எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும். எனவே எளிதாக மின்சார வாரியத்தின் அனைத்து தகவல்களையும் பெற முடியும்.
எனவே உங்கள் மொபைல் எண்ணை உடனே அப்டேட் செய்ய https://www.tnebltd.gov.in/mobilenoentry/ என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். அதில் , நீங்கள் தான் வீட்டின் உரிமையாளர் என்றால் அதற்கு அடையாளச் சான்றினைப் பதிவேற்ற வேண்டும். பகுதி பொறியாளரின் சரிபார்ப்பு மற்றும் உறுதிப்படுத்தலின் பேரில், மொபைல் எண் அப்டேட் செய்யப்படும்.
நீங்கள் தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் என்றால் அதில் ‘Owner cum Occupant mobile number’ ( ‘உரிமையாளர் மற்றும் குடியிருப்பாளர் மொபைல் எண்’) என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்கள் மொபைல் எண்ணை புதுப்பித்து மின்வெட்டுகள் மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் பற்றிய தகவல்களைப் பெறுங்கள்.
உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்க TANGEDCO இணையதளம்: https://t.co/1sdtY05EIO – ஐப் பார்வையிடவும்.#MobileNumberUpdate #TANGEDCO #TNEB pic.twitter.com/y3XqHseEjy
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) September 6, 2023
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


