மனித வளக்குறியீடு (HDI):
- மனித வளக்குறியீடு (HDI) 1990-ம் ஆண்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் மெஹபூம் உல் ஹக் மற்றும் இந்தியாவைச் சோந்த பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
- Dr. மெஹபூம் உல் ஹக் என்ற பொருளாதார நிபுணரின் கூற்றுப்படி ‘மனிதவள மேம்பாடு என்பது கல்வி, உடல்நலம். வருமானம், அதிகாரம். போன்றவைகளில் மக்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் ஒரு செயல்முறையாகும்.
மனிதவள வளர்ச்சிக் குறியீடுகள்:
- மக்கள்தொகை போக்குகள். ஆரோக்கிய வெளிப்பாடு. கல்விச்சாதனைகள், தேசிய வருமானம், உள்கட்டமைப்பு, தொழில், வேலைவாய்ப்பு, மனித பாதுகாப்பு, மனித மற்றும் முதலீட்டு ஈர்ப்பு ஆகியன மனித வள வளர்ச்சியின் குறியீடுகளாகும்.
- நல்வாழ்வியல், உணர்வு மற்றும் அடிப்படை உரிமை ஒப்பந்தங்கள் ஆகியன மனித வள மேம்பாட்டு துணைக்குறியீடுகளாகும்.
- மனித வளக்குறியீடு பின்வரும் 3 அம்சங்களைக் கருத்தில் கொண்டு கணக்கிடப்படுகிறது.
- ஆரோக்கியம்
- சிறந்த கல்வி
- நல்ல வாழ்க்கைத்தரம் (தனிநபர் வருமானம்)
மனிதவள மேம்பாட்டு வகைப்பாடு:
- இது கால்மான விளக்கப் பரவல் குறியீடுகளில் இருந்து பெறப்படுகிறது.
வகைப்பாடு:
- HDI 0.550 குறைந்த மனித வள மேம்பாடு.
- HDI 0.550 – 0.699 மிதமான மனித வள மேம்பாடு.
- HDI 0.700 – 0.799 அதிக மனித வள மேம்பாடு.
- HDI 0.800 அதற்கு மேல் மிக அதிக மனித வள மேம்பாட்டை குறிக்கிறது.
- 1990 முதல் ஐக்கிய நாடுகள் முன்னேற்றக் கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மனித மேம்பாட்டு அறிக்கையை பிரசுரம் செய்கிறது.
- இக்குறியீடு நாடு மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் தற்போது தயாரிக்கப்படுகிறது.
- அரசாங்கத்திற்கு மக்களின் உண்மையான வாழ்க்கைத்தரத்தைக் கண்டறிய HDI பயன்படுகிறது.
- இதனை ஐக்கிய நாடுகள் முன்னேற்ற திட்டம் ‘ (UNDP) வெளியிட்டது.
- இது எதிர்பர்க்கப்படும் வாழ்நாள் குறியீடு, கல்விக்குறியீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் அமைக்கப்பட்டது.
- மனித மேம்பாட்டுக் குறியீட்டைக் கணக்கிடூவதற்கு முன் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்புகள் ஒவ்வொரு குறியீட்டிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
- ஓவ்வொரு பரிமாணத்திலும் அதன் செயல்பாடுகள் 0.க்கும் 1-க்கும் இடையிலான மதிப்பில் கீழக்கண்ட முறையில் கணக்கிடப்படுகிறது.
பரிமாணக்குறியீடு = உண்மை மதிப்பு – குறைந்தபட்ச மதிப்பு / அதிகபட்ச மதிப்பு – குறைந்தபட்ச மதிப்பு
- திட்டக்குழுவின் 2011-ம் ஆண்டு மனித மேம்பாட்டு அறிக்கையின்படி மனிதவளர்ச்சிக் குறியீடு 1980 முதல் 2011 வரை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது.
- அதாவது மனித மேம்பாட்டுக் குறியீடு 1981-ல் 0.302லிருந்து 2011-ல் 0472 ஆக உயர்ந்துள்ளது.
மனிதவள மேம்பாட்டில் உலகளவில் இந்தியாவின் நிலை:
- ஐக்கிய நாடுகளவையின் வளர்ச்சித் திட்டம் (UNDP) 2019-ம் ஆண்டிற்கான மனிதவள அறிக்கையை “வருமானத்தையும் தாண்டி” சாராசரியையும் தாண்டி. இன்றையும் தாண்டி 21-ம் நூற்றாண்டில் மனிதவள ஏற்றத்தாழ்வுகள் என்ற தலைப்பில் 9 டிசம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது
- 189 நாடுகள் அடங்கிய இந்த மனிதவள மேம்பாட்டுக்குறியீடு 2019 பட்டியலில் உலகளவில் இந்தியா 0.647 மதிப்பீட்டூடன் 129வது இடத்தில் உள்ளது.
- 2018ம் ஆண்டில் இந்தியா 130வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்தப்பட்டியலில் முதல் 5 இடங்கள் – நார்வே. சுவிட்சாலாந்து, அயர்லாந்து. ஜெர்மனி, மற்றும் ஹாங்காங் நாடுகள் பெற்றுள்ளன.
இந்தியாவின் அண்டை நாடுகளில்:
- இலங்கை -71, பூட்டான் -134. வங்காளதேசம் – 135. பாகிஸ்தான் -152, ஆப்கானிஸ்தான் – 170
- இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கான மனிதவள மேம்பாட்டுக் குறியீடு கடைசியாக 2017ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
- 2017ம் ஆண்டில் ஐ.நா வளர்ச்சித் திட்டம் வெளியிட்ட மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் 189 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 0.64 குறியீடுகளுடன் 130வது இடத்தை பெற்றிருந்தது. தமிழ்நாடு 0.708 குறியீடுகளுடன் இந்திய அளவில் 6வது இடத்தை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் 2017 மனிதவளக் குறியீடுகள்:
1 | கேரளா | 0.790 |
6 | தமிழ்நாடு | 0.708 |
12 | கர்நாடகா | 0.682 |
16 | தெலுங்கானா | 0.664 |
தமிழ்நாடு HDI:
- தமிழ்நாடு அரசின் முதலாவது மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2003-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை தமிழக மாநில திட்டக்குழு, மத்திய திட்டக்குழு மற்றும் ஐ.நா வளர்ச்சித் திட்டம் (UNDP) ஆகியவற்றின் உதவியுடன் தயாரித்தது.
- தமிழ்நாடு அரசின் இரண்டாவது மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2017-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதனை மாநில திட்டக்குழு. ஐ.நா வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் உதவியுடன் தயாரித்தது.
- இரண்டாவது மனித வள மேம்பாட்டு அறிக்கையை தயாரிப்பதில் தமிழக திட்டக்குழுவிற்கு, சென்னையில் உள்ள மெட்ராஸ் வளர்ச்சிக் கல்வி நிறுவனம் உதவி புரிந்தது.
தமிழ்நாடு மாநில மனித மேம்பாட்டு அறிக்கை – 2017:
- தமிழ்நாட்டின் மக்கள் தொகை 72.14 மில்லியன் (7.21 கோடி)
- பாலின விகிதம் : 996, இது 32 மாவட்டங்களில். 12 மாவட்டங்களில் சாதகமானதாக இல்லை.
- மக்கள் தொகை அடாத்தி : 555
- குடிசைப்பகுதிகளின் மக்கள் தொகை 2011-ல் 2.6 மில்லியனாக இருந்தது. இது vஒட்டுமொத்த நகரமக்கள் தொகையில் (34.90 மில்லியன் ) 8% ஆகும்
- குறைந்த கல்வியறிவு கொண்டுள்ள மாவட்டம் தர்மபுரி.
பொருளாதாரம்:
- 2013-14 பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சதவிகிதம் 7.29சதவீதம்
- 2004-2005 விவசாயம் மற்றும் அது தொடர்பான தொழில்கள் மூலம் மாநிலத்தின் மொத்த வருவாய்க்கான பங்களிப்பு 11.65 சதவீதம் ஆக இருந்தது. இது 2011-12 8.7 சதவீதம் ஆக குறைந்தது.
- 2011-19ம் ஆண்டில் நிகர உள்நாட்டு உற்பத்தியில் தொழில்துறை 27.9சதவீதம் பங்களித்தது. இதில் உற்பத்தி துறையின் பங்களிப்பு மட்டுமே 17.5 சதவீதம் ஆகும்.
- 92 சதவீதம் சிறு மற்றும் குறு விவசாய பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
- பயிரிடும் பரப்பு 2011-12ல் 49.65 லட்சம் ஹெக்டேர். விவசாயம் சாராத பயன்பாட்டுக்கு 2011-12ல் 21.80 லட்சம் ஹெக்டேர்.
- 2013-14ல் விளைச்சல் 10.33 மில்லியன் மெட்ரிக் டன். (இது முந்தைய ஆண்டின் விளைச்சலை விட 0.16 மெட்ரிக் டன் அதிகம்)
மனித மேம்பாட்டு நிலை:
- மனித மேம்பாட்டு அட்டவணை என்பது, நலமாக இருக்கத் தேவையான கல்வி. ஆரோக்கியம். வருவாய் ஆகிய மையப் பரிமாணங்களின் அளவீடுகள் தாம். மரபு ரீதியிலான மனித மேம்பாட்டு அம்சங்களுடன். துல்லியமான புரிதலுக்காக. பிற குறியீடுகளுடன் இணைக்கப்பட்டு கணக்கீடு செய்யப்படுகிறது.
- பாலின சமமின்மை குறியீட்டு அட்டவணை
- குழந்தை மேம்பாட்டுக் குறியீட்டு அட்டவனை
Save the Children பூவில் உள்ள அமைப்பு(2008)) எனும் அமைப்பால் உருவாக்கப்பட்டது.
- கல்வி, ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலை போன்றவை எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
- 2018 116/172
- 2019 113/176
பல்பரிமாண வறுமைக் குறியீட்டு அட்டவணை:
- அடிப்படை வசதிகளான குடிநீர். எரிபொருள். கழிப்பிட வசதி போன்றவைகளைப் பெறுவதில் சிரமங்கள் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள இவற்றை பெறமுடியாமல் போனால் நலவாழ்வு சாத்தியமில்லை
உணவுப் பாதுகாப்புக் குறியீட்டு அட்டவணை
- உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள, அது மட்டுமன்றி பயன்படும் உணவின் ஊட்டச்சத்து. குறித்தும் விபரம் இருக்கும்.
முதல் 5 மாவட்டங்கள்:
எண் | மாவட்டம் | Index | Rank |
---|---|---|---|
1 | கன்னியாகுமரி | 0.944 | 1 |
2 | விருதுநகர் | 0.855 | 2 |
3 | தூத்துக்குடி | 0.852 | 3 |
4 | சென்னை | 0.847 | 4 |
5 | காஞ்சிபுரம் | 0.845 | 5 |
கடைசி 3 மாவட்டங்கள்:
எண் | மாவட்டம் | Index | Rank |
---|---|---|---|
1 | தேனி | 0.539 | 30 |
2 | பெரம்பலூர் | 0.447 | 31 |
3 | அரியலூர் | 0.282 | 32 |
பாலின சமமின்மை குறியீடு:
முதல் 5 மாவட்டங்கள்:
எண் | மாவட்டம் | Index | Rank |
---|---|---|---|
1 | நீலகிரி | 0.036 | 1 |
2 | விருதுநகர் | 0.048 | 2 |
3 | வேலூர் | 0.051 | 3 |
4 | நாமக்கல் | 0.054 | 4 |
5 | பெரம்பலூர் | 0.057 | 5 |
கடைசி 3 மாவட்டங்கள்:
எண் | மாவட்டம் | Index | Rank |
---|---|---|---|
1 | விழுப்புரம் | 0.113 | 30 |
2 | சிவகங்கை | 0.114 | 31 |
3 | அரியலூர் | 0.118 | 32 |
குழந்தை நல மேம்பாட்டுக் குறியீட்டென்:
முதல் 5 மாவட்டங்கள்:
எண் | மாவட்டம் | Index | Rank |
---|---|---|---|
1 | கன்னியாகுமரி | 0.872 | 1 |
2 | கோயம்புத்தூர் | 0.745 | 2 |
3 | தூத்துக்குடி | 0.712 | 3 |
4 | தஞ்சாவூர் | 0.710 | 4 |
5 | சிவகங்கை | 0.706 | 5 |
கடைசி 3 மாவட்டங்கள்:
எண் | மாவட்டம் | Index | Rank |
---|---|---|---|
1 | கிருஷ்ணகிரி | 0.474 | 30 |
2 | திருவண்ணாமலை | 0.426 | 31 |
3 | அரியலூர் | 0.410 | 32 |
பல்பரிமாண வறுமைக் குறியீட்டெண்:
முதல் 5 மாவட்டங்கள்:
எண் | மாவட்டம் | Index | Rank |
---|---|---|---|
1 | காஞ்சிபுரம் | 0.34 | 1 |
2 | சென்னை | 0.34 | 2 |
3 | கடலூர் | 0.38 | 3 |
4 | கோயம்புத்தூர் | 0.41 | 4 |
5 | நாகப்பட்டினம் | 0.41 | 5 |
கடைசி 3 மாவட்டங்கள்:
எண் | மாவட்டம் | Index | Rank |
---|---|---|---|
1 | ராமநாதபுரம் | 0.63 | 30 |
2 | பெரம்பலூர் | 0.63 | 31 |
3 | தாமபுரி | 0.70 | 32 |
உணவுப் பாதுகாப்பு குறியீட்டெண்:
முதல் 5 மாவட்டங்கள்:
எண் | மாவட்டம் | Index | Rank |
---|---|---|---|
1 | திருவாரூர் | 0.580 | 1 |
2 | கன்னியாகுமரி | 0.562 | 2 |
3 | நாகப்பட்டினம் | 0.524 | 3 |
4 | திருவள்ளூர் | 0.511 | 4 |
5 | திருப்பூர் | 0.487 | 5 |
கடைசி 3 மாவட்டங்கள்:
எண் | மாவட்டம் | Index | Rank |
---|---|---|---|
1 | விருதுநகர் | 0.268 | 30 |
2 | பெரம்பலூர் | 0.267 | 31 |
3 | நீலகிரி | 0.266 | 32 |
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 PDF Collections:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes