வேலைவாய்ப்பற்றோர் உதவித்
தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலுார்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1.10.2021 துவங்கிய காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை
பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.சி.,
தேர்ச்சி மற்றும் தோல்வி,
அதற்கும் மேலான கல்வித்
தகுதி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்திருக்க வேண்டும். பதிவை புதுப்பித்து 30.09.2021 அன்று 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்
தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்
திறனாளிகளை பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து
ஓராண்டு முடித்திருந்தால் போதும்.
பொறியியல்,
மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்.சி.,
நர்சிங், போன்ற தொழில்நுட்ப படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம்
ரூ. 72 ஆயிரத்திற்கு மிகாமல்
இருக்க வேண்டும். உதவித்
தொகை பெற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 30.09.2021 அன்று
45 வயதிற்குள்ளும், மற்ற
பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க
வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக
காண்பித்து இலவசமாக விண்ணப்பம் பெறலாம்.
பூர்த்தி
செய்த விண்ணப்பத்தை வரும்
30ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அசல்
கல்விச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசிய
மயமாக்கப்பட்ட வங்கி
கணக்கு புத்தகத்துடன் நேரில்
சமர்ப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


