வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்
தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
– மயிலாடுதுறை
பிரதமரின்
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் தொழில் தொடங்க
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்
விண்ணப்பிக்கலாம் என
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா்
இரா.லலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய
அரசால் செயல்படுத்தப்படும் பிரதம
மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், தொழில்கடன் பெற
உற்பத்தி சார்ந்த தொழில்
திட்ட மதிப்பீடு 10 லட்சத்துக்கு மேலும், சேவைத் தொழில்
திட்ட மதிப்பீடு 5 லட்சத்துக்கு மேல் இருப்பின் 8-ஆம்
வகுப்பு தோச்சி பெற்ற,
18 வயதுக்கு மேற்பட்டோர் இக்கடனை
பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு
வருமான வரம்பு இல்லை.
அதிகபட்ச
திட்ட மதிப்பீடு உற்பத்தி
சார்ந்த தொழில்களுக்கு ரூ.25
லட்சம் வரையிலும், சேவை
சார்ந்த தொழில்களுக்கு ரூ.10
லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. மேலும், திட்ட முதலீட்டில் விளிம்புத் தொகையாக பொதுபிரிவினா் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினா்களான பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர், பெண்கள்,
மாற்றுத்திறனாளிகள், முன்னாள்
ராணுவத்தினா், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினா் மற்றும்
திருநங்கைகள் 5 சதவீதமும்
செலுத்தவேண்டும்.
பொதுப்பிரிவினருக்கு நகா்ப்புறங்களில் 15 சதவீதமும்,
ஊரகப் பகுதியில் 25 சதவீதமும்,
சிறப்பு பிரிவினருக்கு நகா்ப்புறங்களில் 25 சதவீதமும், ஊரகப்
பகுதியில் 35 சதவீதமும் திட்ட
மதிப்பீட்டில் மானியம்
வழங்கப்படும்.
இத்திட்டத்தில் அனைத்து லாபகரமான உற்பத்தி
மற்றும் சேவை சார்ந்த
சுற்றுப்புற சூழலுக்கு நன்மை
பயக்கும் தொழில்களுக்கு கடன்
வழங்கப்படுகிறது.
எனவே,
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற
விரும்புவோர் https://www.kviconline.gov.in/pmegpeportal/pmegphome/index.jsp என்ற இணையதளம்
மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொதுமேலாளா், மாவட்ட தொழில்
மையம், கச்சேரி சாலை,
(செந்தில் பைப் இரண்டாம்
தளம்) மயிலாடுதுறையில் உள்ள
மாவட்ட தொழில் மைய
பொது மேலாளரை 9994863101
என்ற கைப்பேசியில் தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


