UGC-NET அடுத்த தேர்வு
எப்பொழுது ? விரைவில் அறிவிக்க
வலியுறுத்தல்
அதே
நாளில் மற்ற முக்கிய
தேர்வுகள் நடக்க இருப்பதால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யுஜிசி
கடந்த 12-ம் தேதி
அறிவித்தது. இதற்கு முன்
செப்டம்பர் 3ம் தேதி
நடக்க வேண்டிய தேர்வை
அதே காரணத்தை கூறி
ஒத்திவைத்தது. NTA UGC-NET 2020ஆம்
ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வு
மே மாதம் தேர்வுகள்
நடைபெறுவதாக இருந்தது. ஆனால்,
கொரோனோ பரவல் காரணமாக
நெட் தேர்வு ஒத்தி
வைக்கப்பட்டது. பின்னர்
ஜூன் 2021 மாதம் நடக்க
இருந்த தேர்வுகளையும் கொரோனோ
காரணமாக ஒத்தி வைப்பதாகக் கூறியது.
அக்டோபர்
17-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு மீண்டும் 4-வது
முறையாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால்
மீண்டும் எப்பொழுது தேர்வு
நடைபெறும் என்ற தேதி
இன்னும் அரசு அறிவிக்கவில்லை. இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு
ஒத்திவைத்தது தொடர்பாக
சமூக வலைத்தளங்களில் தங்களுடைய
அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தேர்வுத் தேதிகளை
விரைவில் வெளியிடுமாறு அவர்கள்
மத்திய கல்வி அமைச்சரிடம் ட்விட்டர் வாயிலாக கோரிக்கை
வைத்து வருகின்றனர்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தேர்வுகளுக்கு 10-15 நாட்களுக்கு முன்
அனுமதி அறிவிப்பை வெளியிடுமாறு அவர்கள் யுஜிசியிடம் ட்விட்டர்
வாயிலாக கூறியுள்ளனர். திடீரென
தேர்வு தேதியை அறிவித்து
தேர்வை நடத்த வேண்டாம்
எனவும் கூறி
#ReleaseNETEXAMDATE என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


