TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
உடுமலை அரசு
கலைக்
கல்லுாரியில் வரும்
8ல் மாணவர் சேர்க்கை துவக்கம்
உடுமலை
அரசு கலைக் கல்லுாரியில், 2022-2023ம்
கல்வியாண்டின், இளநிலைப்
பாடப்பிரிவுக்கு மாணவர்
சேர்க்கை நடக்கிறது.
உடுமலை
அரசு கல்லுாரியில், 14 இளநிலை
பட்டப்படிப்புகளிலுள்ள, 864 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை வரும்,
8ம் தேதி துவங்குகிறது.
முதல்
நாளான 8ம் தேதி,
மாற்றுத்திறனாளி, தேசிய
மாணவர் படை, விளையாட்டுத்துறை என, சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
தொடர்ந்து,
தரவரிசைப்பட்டியலில், 1 முதல்
1,000 வரை உள்ளவர்களுக்கு, வரும்
10ம் தேதி; 1,001 முதல்
1,800 வரை, 11ம் தேதி;
தரவரிசை எண், 1,801 முதல்
2,600 வரையும், 12ம் தேதி;
2,601 முதல் 3,000 வரை, 13ம்
தேதி சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.
இதேபோல,
13ம் தேதி, மதியம்,
2 மணிக்கு தமிழ் இலக்கியப்பாடப்பிரிவிற்கும், மதியம், 3 மணிக்கு
ஆங்கில இலக்கிய பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடக்கிறது.
மாணவர்கள்
தங்கள் தரவரிசை அறிந்து
கொள்ள, கல்லுாரி இணையதள
முகவரியை பார்வையிடலாம்.
சேர்க்கை
பெற வரும் மாணவர்கள்,
அசல் டிசி, மார்க்
ஷீட், ஜாதிச்சான்றிதழ், ஆதார்
அட்டை, பாஸ்போர்ட் அளவு
போட்டோ, இணைய தளத்தில்
பதிவு செய்த விண்ணப்ப
நகல், தரவரிசை உள்ள
கல்லுாரி இணையதள பக்கத்தின் நகல், மூலச்சான்றிதழ் நகல்
எடுத்து வர வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here