உயர்கல்வி பயிலும்
மாணவிகளுக்கு உதவும்
Udaan திட்டம்
ஐஐடி,
என்ஐடி உள்ளிட்ட பல
புகழ்பெற்ற அரசு பொறியியல்
கல்லூரிகளில் சேர
சிபிஎஸ்சி மாணவிகளை ஊக்கப்படுத்துகிறது Udaan திட்டம்.
இந்தத்
திட்டத்தின் கீழ் அந்த
கல்லூரிகளில் சேர
நடக்கும் நுழைவுத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ்
ஆண்டுதோறும் 1000 மாணவிகளுக்கு சிறப்பு
பயிற்சி வழங்கப்படும். அவர்களில்
50 சதவீதம் பெயர் எஸ்சி
எஸ்டி மற்றும் இதர
பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருப்பார்கள்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
11ம்
வகுப்பு படிப்பவர்கள் ஆக
இருந்தால் பத்தாம் வகுப்பில்
குறைந்தபட்சம் 70 சதவீத
மதிப்பெண்ணும், கணிதம்
மற்றும் அறிவியல் பாடங்களில் 80 சதவீத மதிப்பெண்ணும் அவசியம்.
பன்னிரண்டாம் வகுப்பு
மாணவிகளாக இருந்தால் பத்தாம்
வகுப்பில் மேற்கண்ட மதிப்பெண்
தகுதியுடன் 11ஆம் வகுப்பில்
75% மதிப்பெண்ணும் அவசியம்.
மதிப்பெண்
அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த
பயிற்சியில் ஏழை மாணவி
களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ்
பயிற்சி பெறும் மாணவிகள்
படிப்பைத் தொடர நிதி
உதவி வழங்கப்படும்.
சிபிஎஸ்சி
பாடத்திட்டத்தில் படிக்கும்
மாணவிகள் மட்டுமல்லாமல் மாநில
பாடத்திட்டத்தில் படிப்போரும் இந்த சிறப்பு பயிற்சியில் சேரலாம். பிளஸ் 1 மற்றும்
பிளஸ் 2 படிக்கும் இரண்டு
ஆண்டுகளுக்கு இந்த
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். https://transformingindia.mygov.in/
என்ற இணைய முகவரியில் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


