புதுச்சேரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பள்ளி,
கல்லூரிகளுக்கு இரண்டு
நாள்கள் விடுமுறை
தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் நேற்றிரவு
முதல் கனமழை பெய்து
வருகிறது. இதன் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய
மாவட்டங்களில் பள்ளி,
கல்லூரிகளுக்கு 2 நாள்கள்
விடுமுறை அளித்து முதல்வர்
மு.க. ஸ்டாலின்
உத்தரவிட்டுள்ளார்.
இதன்
தொடர்ச்சியாக புதுச்சேரியிலும் 2 நாள்களுக்கு பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை
அளிக்கப்படுவதாக கல்வி
அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். மேலும் 1 முதல் 8 வரையிலான
வகுப்புகளுக்கு நாளை
(திங்கள்கிழமை) பள்ளிகள்
திறக்கப்படவிருந்தன. அதுவும்
தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.