Home Blog திருச்சி மாவட்ட ஓய்வூதியா்கள் தொடா்ந்து ஓய்வூதியம் பெற நேர்காணலுக்கு அழைப்பு

திருச்சி மாவட்ட ஓய்வூதியா்கள் தொடா்ந்து ஓய்வூதியம் பெற நேர்காணலுக்கு அழைப்பு

0

Trichy District Retirees continue to be called for interviews to get their pensions

TAMIL MIXER EDUCATION-ன் ஓய்வூதியதாரர்களுக்கான செய்திகள்

திருச்சி மாவட்ட
ஓய்வூதியா்கள் தொடா்ந்து
ஓய்வூதியம் பெற நேர்காணலுக்கு அழைப்பு

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா்
கூறியது:

ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், மாவட்டக்
கருவூலங்கள் மற்றும் சார்
கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு
ஓய்வூதியா்கள், குடும்ப
ஓய்வூதியா்களுக்கு கடந்த
2020, 2021
ம் ஆண்டுகளுக்கான ஓய்வூதியா் நேர்காணல் கரோனாவால் நடைபெறாத
நிலையில், 2022-2023ம்
ஆண்டுக்கான நோகாணலை நடத்த
அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே,
ஓய்வூதியா்கள் மின்னணு
வாழ்நாள் சான்றைப் பதிவு
செய்து ஆண்டு நோகாணலில்
பங்கேற்க ஜீவன் பிரமான்
இணையதளம் மூலமாக இந்திய
அஞ்சல் துறை வங்கியின்
சேவையைப் பயன்படுத்தி தங்களது
இருப்பிடத்திலிருந்தபடியே தபால்
துறை பணியாளா்கள் மூலம்
ரூ. 70 கட்டணம் செலுத்தி
மின்னணு வாழ்நாள் சான்று
பெறலாம்.

மேலும்,
அரசு சேவா
மற்றும் பொதுச் சேவை
மையங்களின் மூலமும், ஓய்வூதியா் சங்கத்தின் மூலம் கைரேகை
குறியீட்டு கருவியைப் பயன்படுத்தியும், கருவூல முகாம் இலவச
சேவையைப் பயன்படுத்தியும்,  அரசு கருவூல
இணைய முகவரியிலிருந்து வாழ்நாள்
சான்றை பதிவிறக்கி, அரசு
அலுவலா்களிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம்
அனுப்பியும் ஆண்டு நோகாணலில்
பங்கேற்கலாம்.

வெளிநாட்டில் வசிப்போர், இணையதளத்திலிருந்து வாழ்வு
சான்றிதழை பதிவிறக்கி இந்திய
தூதரக அலுவலா், நோட்டரி
வழக்குரைஞா் உள்ளிட்டோரிடம் சான்று
பெற்று தபால் மூலமாக
ஓய்வூதியம் பெறும் அலுவலகத்துக்கு அனுப்பியும் நேர்காணலில் பங்கேற்கலாம்.

ஓய்வூதியதாரா்கள் நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதியப் புத்தகத்துடன் ஜூலை
முதல் செப்டம்பா் வரை
ஏதேனும் ஓா் அரசு
வேலை நாளில் காலை
10
மணி முதல் பிற்பகல்
2
மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும்
கருவூலத்துக்குச் சென்று
ஆண்டு நேர்காணலில் பங்கேற்கலாம்.

குறைகள்
இருந்தால் சென்னையிலுள்ள ஆணையரகத்துக்கு தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாகப்
புகார் தெரிவிக்கலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version