HomeBlogTRB: வரும் 28, 29, 30, 31 தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.! Hall Ticket...
- Advertisment -

TRB: வரும் 28, 29, 30, 31 தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.! Hall Ticket இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கு அரசு பல்தொழில்நுட்பக்‌ கல்லூரி விரிவுரையாளருக்கான தேர்வு இந்த மாதம் 28, 29, 30 மற்றும்‌ 31 தேதிகளில்‌ (காலை, மதியம்‌) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின்‌ அனுமதி சீட்டு ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதள முகவரி http://trb.tn.nic.in/ ல் தேர்வர்கள்‌ தங்களது User ID மற்றும்‌ கடவுச்‌ சொல்‌ உள்ளீடு செய்து இன்று முதல்‌ பதிவிறக்கம்‌ செய்யும்‌ வகையில்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள்‌ நுழைவுச்‌ சீட்டினை நகல் எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள நேரம்‌ மற்றும்‌ அதில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும்‌ ஒரு அசல்‌ அடையாள அட்டையுடனும்‌ விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம்‌ செய்த புகைப்படத்தின்‌ அசல்‌ பிரதியையும்‌ தவறாமல்‌ எடுத்து வர வேண்டும்‌.

தேர்வு நாளன்று தேர்வர்கள்‌ முற்பகல்‌ தேர்விற்கு 07.30 மணிக்குள்ளாகவும்‌, பிற்பகல்‌ தேர்விற்கு 12.30 மணிக்குள்ளாகவும்‌ தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகைபுரிய வேண்டும்‌ என்ற விவரம்‌ தெரிவிக்கப்படுகிறது. தாமதமாக வரும்‌ விண்ணப்பதாரர்கள்‌ தேர்வு மையத்திற்குள்‌ அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌. மேற்படி கணினி வழித்‌ தேர்விற்காக பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும்‌ தேர்வர்கள்‌ தங்களின்‌ உள்‌ நுழைவு மற்றும்‌ கடவுச்சொல்லினைப்‌ பயன்படுத்தி http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில்‌ பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் இந்த பயிற்சி வினாக்கள்‌ முற்றிலும்‌ பயிற்சிக்காக மட்டுமே எனவும்‌ தெரிவிக்கலாகிறது. நுழைவுச்‌ சீட்டில்‌ மாவட்டம்‌, நகரம்‌ மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும்‌ ஒருமுறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவுச்‌ சீட்டு இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌. தேர்வர்கள்‌ அதனையும்‌ கண்டிப்பாக பதிவிறக்கம்‌ செய்து மேற்கண்ட அறிவுரையை பின்பற்றி தேர்வு மையத்தில்‌ தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது.

TRB: வரும் 28, 29, 30, 31 தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.! Hall Ticket இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!


The candidates are requested to use their User ID and Password for downloading their Admit Card through the website http://www.trb.tn.nic.in from 21.10.2021 onwards in the following steps. To familiarize with Computer-based examination Practice test / Mock test is also available. 

Step 1 – Click Login 

Step 2 – Enter User ID and password 

Step 3 – Click Dashboard 

Step 4 – Click Here to download Admit Card

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -