🌟 திருநங்கைகளுக்கான உயர் கல்வித் திட்டம் – அறிமுகம்
திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளும் மற்ற மாணவர்களைப் போல சமமான கல்வி வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் இந்த உயர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் திருநங்கைகளுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து முக்கிய செலவுகளும் அரசால் வழங்கப்படுகிறது.
📌 Quick Info (சுருக்கமான தகவல்)
- திட்டத்தின் பெயர்: திருநங்கைகளுக்கான உயர் கல்வித் திட்டம்
- துறை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
- பயனாளிகள்: திருநங்கைகள் & திருநம்பிகள்
- உதவி: கல்விக் கட்டணம் + விடுதி கட்டணம் + தொடர்புடைய செலவுகள்
- விண்ணப்ப முறை: நேரடி (Offline)
- விண்ணப்ப இடம்: மாவட்ட சமூக நல அலுவலகம்
✅ தகுதிகள் (Eligibility Criteria)
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழ்க்காணும் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
- தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பள்ளிக்கல்வியை முடித்திருக்க வேண்டும்.
- தமிழ்நாடு அரசு அல்லது இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில வேண்டும்.
- முதற்கட்டமாக பட்டப்படிப்பு (UG) மற்றும் பட்டமேற்படிப்பு (PG) பயிலும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு பொருந்தும்.
- தொழில்நுட்ப கல்வி, அஞ்சல் வழி (Distance), திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்ற படிப்புகளுக்கும் இந்த உதவி தொகை வழங்கப்படும்.
📝 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
இந்த திட்டத்திற்கு ஆன்லைன் விண்ணப்பம் இல்லை.
விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து உரிய ஆவணங்களுடன் தங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
🔗 முக்கிய இணைப்புகள் (Important Links)
- 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: www.dipr.tn.gov.in
- 🏛️ வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை
- 📢 TN DIPR: tndipr | tniprnews

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

