Join Whatsapp Group

Join Telegram Group

பிளஸ் 2 முடித்த பிறகு ஊதியத்துடன் பயிற்சி

By admin

Updated on:

பிளஸ் 2 முடித்த
பிறகு ஊதியத்துடன் பயிற்சி

90களில்
ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப புரட்சிக்குப் பின்னர்,
பெரும்பாலான மாணவர்களின் விருப்பத்
தேர்வாகக் கணினி தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் மாறிப்
போயின.

அந்தக்
காலகட்டத்தில்தான், கணினி
தொழில்நுட்பம் படித்தவர்கள் மட்டுமல்லாமல், எந்த
பிரிவில் படித்தவராக இருந்தாலும் அய்டி தொழில் நிறுவனங்களை நோக்கிப் படையெடுக்கும் போக்கு
தொடங்கியது. அய்டி தொழில்
நிறுவனங்களில் அளிக்கப்படும் வேலைகளின் தரம், மேற்கத்தியப் பணிச்சூழல், நல்ல சம்பளம்
உள்ளிட்ட காரணங்களினால், அந்தப்
போக்கு இன்றும் தொடர்கிறது.

அய்டி
துறையை எடுத்துக்கொண்டால், அதில்
முறையாக கணினித்துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களைவிட, பிற
படிப்புகள் முடித்து வேலைக்குச் சேர்ந்தவர்களே அதிகமாக
உள்ளனர். 15 – 16 ஆண்டுகள்
சம்பந்தம் இல்லாமல் வேறு
ஏதோ படித்தவர்களால், எப்படி
அந்த துறையில் நுழைய
முடிகிறது, எப்படி அங்கே
நிலைத்து நின்று சாதிக்க
முடிகிறது? அந்த நிறுவனங்களில் அளிக்கப்படும் திறன்
மேம்பாட்டுப் பயிற்சிகளே அந்தக் கேள்விகளுக்கான பதில்கள்.

பணியின்
தேவைக்கும், படிப்புக்கும் இடையிலிருக்கும் திறன் போதாமையை அந்த
பயிற்சிகள் நிரப்புகின்றன. இந்தப்
பயிற்சிகளின் நீட்சியே,
தற்போது எச்.சி.எல்
நிறுவனம் செயல்படுத்திவரும் பிளஸ்
2
முடித்த மாணவர்களுக்கான டெக்பீ
(TechBee)
படிப்புத் திட்டம்.

டெக்பீ பயிற்சி திட்டம்

டெக்பீ
திட்டத்தில் இணையும் ஒவ்வொரு
மாணவருக்கும் வழங்கப்படும் ஓராண்டு பயிற்சி அவர்களை
மென்பொருள் பொறியாளராக மாற்றுகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் தொழில்
ரீதியாகவும் தயார்ப் படுத்தப்படும் இந்த மாணவர்கள், எச்.சி.எல்
நிறுவனத்திலிருக்கும் நுழைவு
நிலை தகவல் தொழில்நுட்ப வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால்,
பிளஸ் 2க்கு பின்னர்
வெறும் அய்ந்து ஆண்டுகளில், உலகளாவிய பெரும் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப அனுபவமும்,
பிட்ஸ் பிலானி, சாஸ்த்ரா
பல்கலைக்கழகம் போன்ற
மதிப்புமிக்க கல்வி
நிறுவனத்தில் பட்டமும்
மாணவர்களுக்குக் கிடைக்கிறது.

பிளஸ்
2
க்குப் பின்னர் வேலை
சார்ந்த படிப்புகளை வழங்குவதை
மய்யமாகக் கொண்டிருக்கும் இந்தப்
பயிற்சித் திட்டம், நொய்டா,
லக்னோ, மதுரை, சென்னை,
நாக்பூர், பெங்களூரு, விஜயவாடா
அய்தராபாத் ஆகிய இடங்களில்
வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது, 2017இல்
தொடங்கப்பட்ட இந்த
திட்டத்தில் இதுவரை சுமார்
2000
மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

உறுதியளிக்கப்படும் வேலை

உறுதியளிக்கப்படும் வேலை என்பதே
இந்த திட்டத்தின் ஒரு
முக்கிய அம்சம். இந்த
திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு, மென்பொருள் மேம்பாடு, உள்கட்டமைப்பு மேலாண்மை, வடிவமைப்பு பொறியியல்
ஆகியவற்றில் பங்கேற்று தங்கள்
தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கும்
வாய்ப்பு கிடைக்கிறது, மேலும்,
அந்த நிறுவனத்தின் முக்கியமான திட்டப்பணிகளில் (Projects) இணைந்து
பணியாற்றும் வாய்ப்பையும் அவர்கள்
பெறுகிறார்கள்.

முழுமையான பயிற்சிமுறை

12ஆம்
வகுப்புக்குப் பின்னர்,
வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும்
படிப்புகளைத் தேடும்
மாணவர்களுக்கு இது
ஒரு சிறந்த வாய்ப்பு.
ஓராண்டு TechBeeபயிற்சித் திட்டம்,
பின்வரும் கூறுகளைக் கொண்டுள்ளது:

அடிப்படை பயிற்சி

மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தின் அடிப்படை
கூறுகளில் பயிற்சி அளிக்கப்
படுகிறது. இது அவர்களுக்கு அங்கே வேலையில் ஈடுபடுவதற்குத் தேவையான திறனையும் தகுதியையும் அளிக்கிறது.

தொழில்நுட்ப பயிற்சி

பணியமர்த்தப்படும் வேலைக்குத் தேவையான
திறன்களிலும் குறிப்பிட்ட தொழில்நுட்பத்திலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பொறுப்புக்கான பயிற்சி

மாணவர்கள்
பங்கேற்கும் செயல் திட்டங்களில் அவர்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளுக்குத் தேவைப்படும் திறன்
களுக்கான பயிற்சி இங்கே
அளிக்கப்படுகிறது.

மேலும்,
எச்.சி.எல்
நிறுவனத்தின் கற்றல்
மேலாண்மை அமைப்பை அணுகும்
வாய்ப்பும் குழு விவாதங்களில் பங்கேற்கும் வாய்ப்பும் மாணவர்களுக்கு அங்கே கிடைக்கிறது. இது
மாணவர்களின் கற்றலை மேம்படுத்துகிறது. அவர்களின் திறனை
மெருகேற்றுகிறது.

பொருளாதார சுதந்திரம்

டெக்பீ
பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் HCL நிறுவனத்தில் வேலை
உறுதியளிக்கப்படுகிறது. பயிற்சியின்போது மாணவர்களுக்கு மாதம்
10,000
ரூபாய் உதவித்தொகையும், HCL இல்
முழுநேர வேலையைத் தொடங்கும்போது ஆண்டுக்கு ரூபாய் 2 – 2.20 லட்சம்
வரை ஊதியமும் அளிக்கப்படும்.

இதன்
மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கும் பொருளாதார சுதந்திரம் அவர்களைத்
தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றுகிறது. சிறுவயதிலிருந்தே கிடைக்கும் இந்த சுதந்திரம் அவர்கள்
எதிர்காலத்தில் பெரும்
சாதனையாளராக மாறுவதற்குத் தேவைப்படும் உத்வேகத்தை அளிக்கும்.

நிதியுதவி

இந்த
பயிற்சி திட்டத்துக்குத் தேவைப்படும் நிதியுதவிக்கான பொறுப்பையும் இந்த திட்டமே ஏற்றுக்கொள்வதால், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எந்த நிதி
நெருக்கடியும் ஏற்படுவதில்லை. பயிற்சி திட்டத்தில் 90 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண் எடுக்கும்
மாணவர்களுக்குக் கட்டணத்தில் 100 சதவீத சலுகையும், 80 முதல்
90
சதவீதம்வரை மதிப்பெண் எடுக்கும்
மாணவர்களுக்குக் கட்டணத்தில் 50 சதவீத சலுகையும் வழங்கப்படுகிறது.

 கூடுதல் தகவல்களுக்கு: https://www.hcltechbee.com/

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]