சிறுதானியங்களில் இருந்து
உணவு தயாரிக்க பயிற்சி
வேளாண்
பல்கலையில் வழங்கப்படும், சிறு
தானியங்களில் இருந்து
மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியில் பங்கேற்க,
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தொழில்முனைவோர், தன்னார்வலர்களுக்கு வேளாண்
பல்கலையில் பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
சிறிய
அளவிலான முதலீட்டில் சொந்த
தொழில் செய்ய விரும்புவோர், இப்பயிற்சியின் மூலம்
பயனடைய முடிகிறது.
வரும்,
7, 8ம் தேதிகளில், சிறு
தானியங்களான கேழ்வரகு, கம்பு,
சோளம், சாமை, திணை,
வரகு, ஆகியவற்றில் இருந்து
பாரம்பரிய உணவு, பாஸ்தா
உணவு, அடுமனைப் பொருட்கள்,
உடனடி தயார் நிலை
உணவு தயாரிப்பு பயிற்சி
வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் ரூ.1,770 கட்டணத்தை
முதல் நாளன்று செலுத்தி
பயிற்சியில் பங்கேற்கலாம்.
விபரங்களுக்கு 0422 – 6611268 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


