தேங்காய் மற்றும்
இளநீரில் இருந்து மதிப்பு
கூட்டு பொருட்கள் தயாரிக்க
பயிற்சி
தேங்காய்
மற்றும் இளநீரில் இருந்து
மதிப்பு கூட்டு பொருட்கள்
தயாரிக்க, வாரியத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தால், வழங்கப்படும் பயிற்சிகளை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கேரளா
ஆலுவா வாழக்குளத்தில், இயங்கி
வரும், தென்னை வளர்ச்சி
வாரியத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தில், மதிப்பு கூட்டு பொருட்கள்
தயாரிப்புக்காக பல்வேறு
பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
தேங்காய்
சிப்ஸ், சாக்லெட், குக்கீஸ்,
எலுமிச்சை கலந்த சாறு
ஊறுகாய் தயாரிக்க, ஒரு
நாள் பயிற்சி வழங்கப்படும். நபர் ஒருவருக்கு, 500 ரூபாய்
கட்டணம்.
இதில்,
மகளிர் குழு, தனிநபர்,
தென்னை உற்பத்தியாளர் அமைப்பு,
உழவர் உற்பத்தியாளர் அமைப்பை
சேர்ந்தவர்கள் பயிற்சி
பெறலாம்.தேங்காய் தண்ணீரிலிருந்து, வினிகர் தயாரித்தல், இளநீர்
பதப்படுத்துதல், தொழில்
முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
வேதியியல்,
உயிர் வேதியியல், உணவு
வேதியியல், உணவு தொழில்நுட்பம் ஆகிய இளங்கலை படிப்பு
படித்த பட்டதாரிகளுக்கு, 7 ஆயிரம்
ரூபாய் கட்டணத்தில், தென்னை
பொருட்கள் ரசாயன பகுப்பாய்வு குறித்த ஒரு மாத
பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சி பெறவும், விபரங்கள் தெரிந்து
கொள்ளவும், தங்கள் பகுதியிலுள்ள, தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களை அணுகலாம்; அல்லது, www.coconutboard.gov.in என்ற
இணையதளத்தில், விபரங்களை
தெரிந்து கொள்ளலாம்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


