சணல் அலங்கார
பொருட்கள் உற்பத்தி பயிற்சி
சணல்
அலங்கார பொருட்கள் உற்பத்தி
மற்றும் பயிற்சி திட்டங்களில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தேசிய சணல்
வாரியத்தின் சென்னை மண்டல அலுவலகம் அறிவித்து உள்ளது.
ஊக்கத்
தொகை
மத்திய அரசின் ஜவுளித்
துறை கட்டுப்பாட்டில் தேசிய
சணல் வாரியம் இயங்கி
வருகிறது. அதன் சார்பில்,
சணல் பொருட்கள் உற்பத்தி,
விற்பனையை ஊக்குவிக்க, தேசிய
சணல் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதில்,
சணல் பொருட்களுக்கான பயிற்சி,வடிவமைப்பு, உற்பத்தி,மூலப் பொருட்களையும் வழங்குகிறது. இதற்காக 49 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஐந்து
ஆண்டுகளில் 18 ஆயிரம் பேருக்கு
பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.சணல் சில்லரை
விற்பனை மையங்கள், வடிவமைப்பு ஆதார மையம் அமைக்கப்படுவதுடன், உற்பத்தி பொருட்களை
பன்முகப்படுத்துதல், சணல்
அலங்கார பொருட்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை
ஆதரவு திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.
சர்வதேச
சணல் கண்காட்சி மற்றும்
தேசிய, மண்டல கண்காட்சிகளில் பங்கேற்கவும் பல்வேறு
உதவிகள் மற்றும் சலுகைகள்
வழங்கப்படுகின்றன. இத்திட்டங்கள் குறித்த முழுமையான
தகவல்கள், வழிகாட்டு குறிப்புகள், www.jute.com என்ற
இணையதளத்தில் இடம்
பெற்றுள்ளன. தேசிய சணல்
மேம்பாட்டு திட்டத்தின் துணைத்
திட்டங்களில் பங்குதாரர்களாக இடம்பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இணை
இயக்குனர், தேசிய சணல்
வாரியம், TNPSC., காம்ப்ளக்ஸ், எண் 130, ஆர்.கே.மடம்
சாலை, மயிலாப்பூர், சென்னை
– 4 என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.
மேலும்
விபரங்களுக்கு, 044 2462 0059 என்ற தொலைபேசி
எண்; 94444 59448 என்ற
மொபைல் போன் எண்; njbchennai@gmail.com
t_ayyappan@yahoo.com
ஆகிய, Email முகவரியிலும் தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


