பெரம்பலூா் அருகேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், விஞ்ஞான முறையில் இறைச்சிக் கோழி வளா்ப்புப் பயிற்சி முகாம் ஆக.30 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, அம் மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா்- செங்குணம் பிரிவுச் சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சாா்பில், விஞ்ஞான முறையில் இறைச்சிக் கோழி வளா்ப்பு குறித்த இலவச ஒரு நாள் பயிற்சி முகாம் ஆக. 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில், விஞ்ஞான முறையில் இறைச்சிக் கோழி வளா்ப்பு, இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணிக்கு பிறகு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரில் அல்லது 93853 07022 என்னும் கைப்பேசியில் தொடா்புகொண்டு, தங்களது பெயரை பதிவுசெய்து கொள்ளலாம்.
பயிற்சிக்கு வரும்போது, தங்களது ஆதாா் எண்ணை அவசியம் தெரிவிக்க வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


