TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள்
பண்ணை கழிவுகளை
உரமாக்க பயிற்சி
வேளாண்
அறிவியல் நிலையத்தில் வரும்,
20ம் தேதி பண்ணை
கழிவுகளை மட்கு உரமாக்குதல் குறித்த பயிற்சி முகாம்
நடக்கிறது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல்
வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 20ல், காலை,
10.00 மணிக்கு, பண்ணை கழிவுகளை
மக்கும் உரமாக்குதல் என்ற
தலைப்பில், ஒருநாள் இலவச
பயிற்சி மற்றும் செயல்
விளக்கம் நடக்கிறது.
பயிற்சியில், எளிதில் மக்க கூடிய
பண்ணைக் கழிவுகளான (அறுவடைக்குப் பின் எஞ்சியுள்ள தாவர
கழிவு கள், களைச்செடிகள், வீட்டுக் கழிவுகள் மற்றும்
காளான் அறுவடைக்கு பின்னுள்ள
கழிவுகள்), கால்நடைகளின் கழிவுகளான
(மாட்டு எரு, கோழி
எரு) சேகரித்து, மக்கும்
உரம் மற்றும் மண்புழு
உரம் தயாரிக்க இடம்
தேர்வு செய்தல், மண்புழுவின் வகைகள், மக்குதலை துரிதப்படுத்த தேவையான உள்ளீடுகள் மற்றும்
உயிர் உரங்கள் குறித்து
விளக்கமும், மக்கும் உரம்
தயாரித்தல் குறித்த செயல்விளக்கமும் காண்பிக்கப்படும்.
இதில்
விவசாயிகள், விவசாய பெண்கள்,
கிராமப்புற இளைஞர்கள் மற்றும்
ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் வேளாண்
அறிவியல் நிலையத்தை நேரிலோ
அல்லது 04286 266345, 266650 என்ற
தொலைபேசி எண்ணிலோ தொடர்பு
கொண்டு, தங்களது பெயரை
முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here