
தமிழக அரசு சார்பில் மூன்று நாள் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 12.12.2023 முதல் 14.12.2023 வரை காலை10.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இப்பயிற்சியில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் மின்னணு முறையின் நுட்பங்கள் இணையதளத்தை உருவாக்குதல் சமூக ஊடகத்தின் மூலம் சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், நிலையான மேலாண்மை அமைப்பு சமூக பகிர்வு உளவியல், சமூக ஊடக பகுப்பாய்வு பிராண்டிங் லேபிளிங், வடிவமைத்தல் டொமைன் பெயர் உருவாக்குதல் & ஹோஸ்டிங் இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகள், மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை சென்னை- 600032. 44-22252081/22252082, 8668102600 /86681 00181. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@thamoanbarasan @mp_saminathan pic.twitter.com/4ZTIVdcMhi
— TN DIPR (@TNDIPRNEWS) December 2, 2023
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

