இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பயிற்சி – கிண்டி சிறுவர்
பூங்காவில் ஏற்பாடு
படித்த
இருளர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், பாம்பு பிடி
மற்றும் மருத்துவ தாவரங்களை
அடையாளம் காணும் பயிற்சி,
கிண்டி பாம்பு பண்ணையில்
வழங்கப்படுகிறது.
சென்னை,
கிண்டி சிறுவர் பூங்கா
வளாகத்தில் உள்ள பாம்பு
பண்ணையில், 12 வகையான 30க்கும்
மேற்பட்ட பாம்புகள், 50 ஆமைகள்,
50 முதலைகள், பச்சோந்தி உள்ளிட்ட
உயிரினங்கள் உள்ளன.பாம்பு
கடி இறப்பு மற்றும்
பாம்பை அடித்து கொல்லுவதை
தடுக்கும் வகையில், வனவிலங்கு
பாதுகாப்பு, இருளர் பழங்குடியினர் மேம்பாடு மற்றும் பாம்பு
கடி சிகிச்சை மேம்பாடு
திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து செய்கிறது.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கிண்டி
பாம்பு பண்ணையில், படித்து
வேலை தேடி கொண்டிருக்கும், 10 இருளர் பழங்குடியின இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி
வழங்கப்படுகிறது.பாம்பு
பிடிப்பது, சிகிச்சை முறைகள்,
மருத்துவ தாவரங்களை அடையாளம்
காண்பது, அதன் பயன்பாடு
உள்ளிட்ட பயிற்சிகள் 50 நாட்கள்
வழங்கப்படுகின்றன.
இது குறித்து, கிண்டி பாம்பு பண்ணை அறக்கட்டளை செயல் தலைவர் பால்ராஜ் கூறியதாவது:
வன
விலங்கு பாதுகாப்பு, இருளர்
பழங்குடியினர் மேம்பாடு
திட்டத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள
ஆரம்ப சுகாதார நிலையங்களில், பாம்பு கடி மருந்து
வழங்க உள்ளோம். விலங்குகள் வேட்டையாடுவதை தடை
செய்ததால், இருளர் பழங்குடியினர் மக்கள் வேறு தொழிலுக்கு செல்கின்றனர்.
இதில்,
படித்த இளைஞர்களின் நலன்
கருதி, பாம்பு பிடி
பயிற்சி, மருத்துவ தாவரங்களை
அடையாளம் காண்பது, அதன்
பயன்கள் குறித்து மூத்த
இருளர் மக்கள் மற்றும்
வனத்துறை அதிகாரிகளை கொண்டு
பயிற்சி அளிக்கிறோம். இதன்
மூலம், விலங்குகள் சரணாலயம்,
தாவர ஆராய்ச்சி மையம்,
வனத்துறை மீட்பு குழுவில்
வேலைவாய்ப்பு கிடைக்கும். சுற்றுலா பயணியருக்கு வழிகாட்டியாகவும் இருக்க முடியும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


