தமிழக திறன்
மேம்பாட்டுக் கழகம்
சார்பில் 12 துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி
தமிழக
திறன் மேம்பாட்டுக் கழகம்
சார்பில், 12 துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொழிலாளர்
நலத் துறை அமைச்சர்
கணேசன் முன்னிலையில், ஆயத்த
ஆடை மற்றும் வீட்டு
அலங்காரம்; அழகு மற்றும்
நலம்; வீட்டுப் பணியாளர்கள்.
மின்னணுவியல் மற்றும் வன்பொருள்; உணவு
பதனிடுதல்; நகைகள் மற்றும்
கற்கள் உள்ளிட்ட பல துறைகளில் பயிற்சி
அளிக்க, தனியார் அமைப்புகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்
வழியாக, 12 துறைகளில் வேலைவாய்ப்பு பெறும் வகையில், இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சிகள், பயிற்றுனர்களுக்கான பயிற்சி,
மதிப்பீட்டாளர்களுக்கான பயிற்சி
அளிக்கப்படும்.
பயிற்சிக்கான செலவை, தமிழக திறன்
மேம்பாட்டுக் கழகம்
ஏற்கும். உலகத் திறன்
போட்டிகளில், தமிழகத் திறன்
பயிற்சியாளர்கள் பங்கேற்று
பதக்கங்கள் வெல்ல, தேவையான
பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை
செயலர் கிர்லோஷ்குமார், திறன்
மேம்பாட்டுக் கழகம்
மேலாண்மை இயக்குனர் இன்னசன்ட்
திவ்யா பங்கேற்றனர்.