மாற்றுத்திறனாளிகளுக்கு குரூப்
4 தேர்வுக்கு பயிற்சி
குரூப்
4 தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச பயிற்சி
வகுப்பு, மாவட்ட வேலை
வாய்ப்பு மையத்தில் துவக்கப்படுகிறது.
தேர்வாணையம் அறிவித்த குரூப் 4 தேர்வு
வாயிலாக, வி.ஏ.ஓ.,
– இளநிலை உதவியாளர், பில்
கலெக்டர், தட்டச்சர் மற்றும்
சுருக்கெழுத்து தட்டச்சர்
பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களில், 250க்கும் மேற்பட்ட
காலியிடங்கள் மாற்றுத்
திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில் நெறி வழிகாட்டு
மையத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, குரூப் 4 தேர்வுக்கன இலவச
பயிற்சி வகுப்பு துவக்கப்படுகிறது.
பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் பெயரை,
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421 2999152, 94990
55944 என்கிற எண்களில் தொடர்பு
கொண்டு தெரிவிக்கலாம்.