கால்நடைப் பண்ணையாளா்களுக்கு 9, 14, 21ம்
தேதிகளில் பயிற்சி
தஞ்சாவூா்
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்பயிற்சி மையத்தில், கால்நடைப்
பண்ணையாளா்களுக்கான கால்நடை
வளா்ப்பு குறித்த இலவசப்
பயிற்சிகள் ஜூன் 9, 14, 21ம்
தேதிகளில் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா்
– திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி
வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையத்தில்
வெள்ளாட்டுப் பண்ணையம்
குறித்து ஜூன் 9ம்
தேதி பயிற்சி வகுப்பு
நடைபெறுகிறது.
இதுபோல
கறவை மாட்டுப் பண்ணையம்
குறித்து ஜூன் 14ம்
தேதியும், நாட்டுக்கோழிப் பண்ணையம்
குறித்து ஜூன் 21ம்
தேதியும் காலை 10 மணி
முதல் இலவசப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு
அவசியமில்லை. மேலும் விவரங்களுக்கு 04362 264665 என்ற எண்ணில்
காலை 10 மணி முதல்
மாலை 5.45 மணிக்குள் தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


