தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் வரும் நவ.28ம் தேதி காலை 10மணி முதல் மாலை 5.30 மணி வரை தொழில்முனைவோருக்கான டெண்டர் வழிமுறைகள் தொடர்பான பயிற்சியை வழங்குகிறது.
இப்பயிற்சியின் போது அறிமுகம், பொது கொள்முதல் செயல்முறை, விற்பனையாளர்களுக்கான நன்மைகள், செயல்முறை, கொள்முதல் முறைகள், ஏல நடைமுறை மற்றும் ஏலத்தில் பங்கேற்பு நடைமுறை கற்பிக்கப்படும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் https://www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஈக்காட்டுத்தாங்கல், இடிஐஐ அலுவலகச் சாலை, சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்திலும், 9080609808, 9677152265, 9841693060 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.